ஞாயிறு, 26 ஜூன், 2016

அருள்மிகு எழுத்தறிநாதர் திருக்கோவில்கோவில் பெயர் : அருள்மிகு எழுத்தறிநாதர் திருக்கோவில்

சிவனின் பெயர்  : எழுத்தறிநாதர்

அம்மனின் பெயர் : பந்தாடு நாயகி

தல விருட்சம் :   செண்பகமரம்

கோவில் திறக்கும் நேரம் :    காலை 7.மணி முதல் 12. மணி வரை, 
                               மாலை 3 மணி முதல் இரவு  8. மணி வரை

முகவரி : அருள்மிகு எழுத்தறிநாதர் திருக்கோவில், இன்னம்பூர்-612 303. தஞ்சாவூர். தஞ்சாவூர் மாவட்டம். 
Ph:0435 200 0157, 96558 64958

கோவில் சிறப்பு :

* 1000-2000 வருடங்களுக்கு முன் பழமையானது.

* இக்கோயில் சோழர்களால் கட்டப்பட்டது

* இது 45 வது தேவாரத்தலம் ஆகும்.

.* சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.
.
* கல்வி அபிவிருத்தியை தரும் இத்தலத்தில் பிரார்த்திக்கலாம்.

* கோயிலின் ராஜகோபுரம் ஐந்து நிலைகளையுடையது. இங்குள்ள கஜப்பிருஷ்ட விமானம் யானை படுத்திருப்பது போன்று உள்ளது. இதில் ஐந்து கலசங்கள் உள்ளன. இவை சிருஷ்டி (படைத்தல்), ஸ்திதி (காத்தல்), சம்ஹாரம் (அழித்தல்), திரோபவம் (மறைத்தல்), அநுக்கிரகம் (அருளல்) என்றும் ஐந்து தொழில்களை இறைவன் செய்வதைக் குறிக்கிறது. இக்கோயில் கிழக்கு நோக்கி உள்ளது. கொடிமரமில்லை, பலிபீடம், நந்தி உள்ளன. உள்ளே இடதுபுறம் நால்வர் சன்னதி. வலதுபுறத்தில் சுகந்தகுந்தளாம்பிகை சன்னதி. இந்த அம்பாளே பிரதான அம்பாளாக இருக்கிறார். மூலவர் பெரிய நீண்டுயர்ந்த பாணத்துடன் கம்பீரமாகக் காட்சி தருகிறார்.

* பள்ளியில் சேர உள்ள குழந்தைகள் அட்மிஷனுக்கு முன்னதாக இங்கு வந்து அர்ச்சனை செய்து கொள்ளலாம். இங்கு நெல்லில் எழுத பயிற்சி அளிக்கப்படுகிறது. ஐந்து வயதுக்கு மேல் உள்ள குழந்தைகளுக்கு செம்பருத்தி பூவை தட்டில் பரப்பி எழுத பயிற்சி தரப்படுகிறது. பேச்சுத்திறமை இல்லாதவர்கள், படிப்பறிவு இல்லாதவர்களுக்கு நாக்கில் நெல் கொண்டு எழுதப்படுகிறது. இதனால் அறிவுக் கூர்மை பெறும் என்பது நம்பிக்கை. குழந்தை பாக்கியத்துக்காக இங்குள்ள அர்த்தநாரீஸ்வரருக்கு எண்ணெய் அபிஷேகம் செய்கின்றனர்.


* இத்தல இறைவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். விஞ்ஞானம் அடிப்படையில்: லிங்கம் மீது சூரிய ஒளி ஆவணி 31, புரட்டாசி 1, 2, பங்குனி 13, 14, 15 தேதி காலையில் விழுகிறது. இதனை சூரிய பூஜையாக கருதுகின்றனர்.
முந்தைய கோவில்
அடுத்த கோவில்

0 Comments: