கோவில் பெயர் : அருள்மிகு பால தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவில்
முருகன் பெயர் : பால தண்டாயுதபாணி
கோவில் திறக்கும் நேரம் : காலை 6 மணி முதல் 11 மணி வரை மாலை 4 மணி 8 முதல் இரவு மணி வரை.
முகவரி : அருள்மிகு பச்சைமலை பால தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவில்,
கோபிசெட்டிபாளையம் - 638476
தொலைபேசி எண்: 04285 222125
கோவில் சிறப்பு :
பிரார்த்தனை நோயுற்றவர்கள் கோயில் மண்டபத்தில் தங்கி தரிசித்து வழிபாடு செய்கின்றனர் இதன்மூலம் குணம் பெற்று செல்பவர்கள் தங்கள் நேர்த்திக்கடன்களை செலுத்தி நலம்பெறுகின்றனர். நேர்த்திக்கடன்: சுவாமி அபிஷேகம் செய்தும், வஸ்திரம் அணிவித்தும் நேர்த்திக்கடன் நிறைவேற்றலாம்.
தலபெருமை:
ஆண்டாண்டு காலங்களாக ஆன்றோரும், சான்றோரும் வழி வழியாய் வழிபடும் அற்புத ஸ்தலமாக கோபிசெட்டிபாளையம் ஆண்டவர் மலை முருகன் கோயில் திகழ்கிறது. குன்று இருக்கும் இடமெல்லாம் குமரன் குடிகொண்டிருப்பான் என்பதை உணர்த்தும் விதத்தில் கோபியில் உள்ள மூன்று குன்றுகளிலும் முருகப்பெருமான் வெவ்வேறு ரூபங்களில் வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். கோபியில் பச்சைமலை, பவளமலை, ஆண்டவர்மலை என மூன்று குன்றுகள் இயற்கையாகவே அமையப்பெற்றுள்ளது. பச்சைமலை குன்றில் பாலமுருகனாகவும், பவளமலை குன்றில் முத்துக்குமார சுவாமியாகவும், ஆண்டவர்மலை குன்றில் பால தண்டாயுதபாணி சுவாமியாகவும் வேண்டுவோருக்கு வேண்டுவனவற்றை வழங்கி பக்தர்களின் மனதில் நீங்கா இடம் பெற்று விளங்குகிறார். சங்க இலக்கியம், தமிழ்ச்சங்கம், சங்கத்தமிழ் ஆகிய எல்லா சூழ்நிலைகளிலும் போற்றி புகழப்படும் தெய்வம் முருகப்பெருமான். சிவபெருமானின் ஐந்து முகச்சுடரும், நெற்றி கண்ணின் சுடரும் சேர்ந்து ஆறுபொறிகளால் உதித்தவர் ஆறுமுகன். சமயங்கள் 6, கோஷங்கள் 6, ஆதார கமலங்கள் 6, வேத இதிகாசங்கள் 6, ஞான சாதனை 6, சாஸ்திரம் 6 ஆகிய ஆறு அம்சங்களும் முருகப்பெருமானுக்கு உரியவை.இப்படிப்பட்ட கருணைக்கடலாக விளங்கும் பாலதண்டாயுதபாணி சுவாமி ஆண்டவர் மலை குன்றில் நின்றகோலத்தில் வீற்றிருந்து வேண்டுவோருக்கு வேண்டுவனவற்றை வாரி வழங்கி அருள்பொழிந்து வருகிறார்.

0 Comments: