கோவில் பெயர் : அருள்மிகு ஞீலிவனேஸ்வரர் திருக்கோவில்
சிவனின் பெயர் : ஞீலிவனேஸ்வரர்
அம்மனின் பெயர் : விசாலாட்சி, நீல்நெடுங்கண்நாயகி
தல விருட்சம் : கல்வாழை
கோவில் திறக்கும் நேரம் : காலை 6.30 .மணி முதல் 1. மணி வரை,
மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை
முகவரி : அருள்மிகு ஞீலிவனேஸ்வரர் திருக்கோவில்
திருப்பைஞ்ஞீலி - 621 005. திருச்சி மாவட்டம். Ph: 0431 - 2560 813
கோவில் சிறப்பு :
* 1000-2000 வருடங்களுக்கு முன் பழமையானது.
* இது 61 வது தேவாரத்தலம் ஆகும்.
.* சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.
* பங்குனி, புரட்டாசி மாதங்களில் மூன்று நாட்கள் சுவாமி மீது சூரிய ஒளிக்கதிர் விழுகிறது. இத்தல இறைவன் சுயம்பு லிங்கமாக அருள்பாலிக்கிறார். இரட்டை அம்பாள் தலம்.
* இங்கு மூலவர் சன்னதியின் மேல் உள்ள விமானம் பத்ர விமானம் எனப்படும். இத்தல விநாயகர் வசந்த விநாயகர் என்ற பெயரில் அருள்பாலிக்கிறார். ஐந்து பிரகாரங்களுடன் உள்ள இக்கோயிலில் விசாலாட்சி, எமன், கல்யாண, அக்னி, தேவ, அப்பர், மணியங்கருணை என மொத்தம் ஏழு தீர்த்தங்கள் இருக்கிறது.
* பிரகாரத்தில் உள்ள விநாயகர் சிவன் மற்றும் செந்தாமரைக் கண்ணன் எனும் பெருமாளுடன் சேர்ந்தபடி இருப்பதும், தெட்சிணாமூர்த்தியின் கீழ் நந்தி இருப்பதும் வித்தியாசமானதாகும். கொடிமரத்திற்கு அருகில் சுயம்பு நந்தி இருக்கிறது.
* இழந்த பணிவாய்ப்புகள் கிடைக்க, பதவி உயர்வு கிடைக்க, திருமண தடை நீங்க ஆயுள் நீடிக்க இங்கு வேண்டிக்கொள்ளலாம். எமன் சன்னதியில் ஆயுள் ஹோமங்கள் செய்கிறார்கள்.
0 Comments: