வியாழன், 30 ஜூன், 2016

அருள்மிகு மேகலாம்பிகை சமேத சகலபுவனேஸ்வரர் திருக்கோவில்கோவில் பெயர்   : அருள்மிகு  சகலபுவனேஸ்வரர்  திருக்கோவில்

சிவனின் பெயர்   : சகலபுவனேஸ்வரர்

அம்மனின் பெயர் :  மேகலாம்பிகை, சவுந்தரநாயகி

தல விருட்சம்     :    மந்தாரை, வில்வம்

கோவில் திறக்கும் நேரம் :   காலை  7 மணி முதல் 12.30 மணி வரை, 
                                                      மாலை 4.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை.

முகவரி : அருள்மிகு மேகலாம்பிகை சமேத சகலபுவனேஸ்வரர் திருக்கோவில்,(லலிதாம்பிகை கோவில்), திருமீயச்சூர் - 609 405, 
திருவாரூர் மாவட்டம். Ph: 04366-239 170, 94448 36526.

கோவில் சிறப்பு : 

* 1000-2000 வருடங்களுக்கு முன் பழமையானது.

* இது 120 வது தேவாரத்தலம் ஆகும்.

* இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். 

* நாகர், சேக்கிழார், சப்தமாதர்கள் பூஜித்த லிங்கங்கள், அக்னி, எமன், இந்திரன் பூஜித்த லிங்கங்கள் உள்ளன.

* லலிதாம்பிகை ஸ்ரீசக்ர பீடத்தில் ராஜ சிம்மாசனத்தில் அமர்ந்திருக்கிறாள். அபய, வரத ஹஸ்த முத்திரையுடன், வலது காலை மடித்து இடது காலை தொங்கவிட்டு அருளாட்சி செய்கிறாள். வலது காலை மடித்த அம்பிகையைக் காண்பது அரிது. இவளுக்கு அதிக சக்தியும் உண்டு. 

* சித்திரை 21 முதல் 27 வரை உள்ள நாட்களில் சூரியனின் ஒளிக்கதிர்கள் சிவனின் மீது பட்டு சூரிய பூஜை நடக்கிறது.சண்டிகேஸ்வரர் நான்கு முகங்களுடன் அருள்பாலிக்கிறார். சேத்திர புராணேஸ்வரர் சிற்பம் மிகவும் அற்புதமானது. இதிலுள்ள அம்மனின் முகத்தை வலதுபுறமிருந்து பார்த்தால் கோபமாக இருப்பது போலவும், இடதுபுறமிருந்து பார்த்தால் சாந்தமாக இருப்பதை போலவும் தெரியும்.

* இங்குள்ள கல்யாணசுந்தரரை மணமாகாத பெண்கள் வழிபட்டு இறைவனுக்கு மாலை சார்த்தி அர்ச்சனை செய்து வழிபட்டால் விரைவில் திருமணம் கூடும் என்பது நம்பிக்கை. நோயால் பாதிக்கப்பட்டவர்கள் பிரண்டை சாதத்தை தாமரை இலையில் வைத்து சுவாமிக்கு படைத்து பிரசாதமாக சாப்பிடுகின்றனர். பக்தர்கள் தங்களுக்கு குழந்தை பாக்கியம் வேண்டியும், திருமணத்தடை நீங்கவும், கல்வியில் சிறந்து விளங்கவும் லலிதாம்பிகையிடம் பிரார்த்தனை செய்துகொள்கிறார்கள்.

முந்தைய கோவில்
அடுத்த கோவில்

0 Comments: