சனி, 25 ஜூன், 2016

அருள்மிகு நீலகண்டேஸ்வரர் திருக்கோவில்




கோவில் பெயர் :  அருள்மிகு நீலகண்டேஸ்வரர் திருக்கோவில்

சிவனின் பெயர்  : திருநீலகண்டேஸ்வரர், படிகரைநாதர்

அம்மனின் பெயர் : அமிர்தவல்லி, மங்களாம்பிகை

தல விருட்சம் :  இலுப்பை

கோவில் திறக்கும் நேரம் :    காலை 7 மணி முதல் 11.30 மணி வரை, 
                               மாலை 3.30 மணி முதல் இரவு 8 மணி வரை

முகவரி : அருள்அருள்மிகு நீலகண்டேஸ்வரர் திருக்கோவில், இலுப்பைபட்டு, மணல்மேடு - 609 202 மயிலாடுதுறை தாலுகா, நாகப்பட்டினம் மாவட்டம் Ph:092456 19738.

கோவில் சிறப்பு :

* 1000-2000 வருடங்களுக்கு முன் பழமையானது.

*  இது 30 வது தேவாரத்தலம் ஆகும்.

*  சிவன் சுயம்பு லிங்கமாக அருள்பாலிக்கிறார்.

*  இத்தலத்து இறைவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். இங்கு தர்மன், பீமன், அர்ச்சுனன், நகுலன், சகாதேவன் ஆகிய பஞ்சபாண்டவர்கள் வழிபட்ட பஞ்சலிங்கங்கள்.

*  இங்குள்ள கோபுரம் 5 நிலைகளைக் கொண்டது. பிரகாரத்தில் திரவுபதி வழிபட்ட வலம்புரி விநாயகர் இருக்கிறார்.

*  இத்தலத்து இடம்புரி விநாயகரும் இருக்கிறார். ஒரே இடத்தில் இரட்டை விநாயகர்களை தரிசனம் செய்வது விசேஷம். கோயிலுக்கு எதிரே வெளியில் விஜய விநாயகர் இருக்கிறார். இவரிடம்  
  வேண்டிக்கொண்டும் அனைத்து  செயல்களும் வெற்றியடையும் என்பது நம்பிக்கை

*  இலுப்பை மரங்கள் நிறைந்த பகுதி என்பதால் இத்தலம் "இலுப்பைபட்டு' என்று பெயர் பெற்றது. திருப்பழமண்ணிப் படிக்கரை, மதூகவனம் என்பது இத்தலத்தின் வேறு பெயர்கள்.

*  நோய்கள் நீங்குவதற்கு, பணியில் சிறப்பிடம் பெறுவதற்கு இங்கு வேண்டிக்கொள்கிறார்கள். பதினாறு பேறுகளும் பெற சோடஷலிங்க சன்னதியில் வழிபடுகிறார்கள்

*  இத்தலத்திலிருந்து சுமார் 3 கி.மீ., தூரத்தில் சிவன், அர்ஜுனனின் வாளை ஒழித்து வைத்து அருள் செய்த திருவாளொளிப்புற்றூர் கோயில் அமைந்துள்ளது.
முந்தைய கோவில்
அடுத்த கோவில்

0 Comments: