சனி, 25 ஜூன், 2016

அருள்மிகு பசுபதீஸ்வரர் திருக்கோயில்





கோவில் பெயர் : அருள்மிகு பசுபதீஸ்வரர் திருக்கோயில்

சிவனின் பெயர்  : பசுபதீஸ்வரர்

அம்மனின் பெயர் : வேணுபுஜாம்பிகை, காம்பணையதோளி

தல விருட்சம் :  சரக்கொன்றை

கோவில் திறக்கும் நேரம் :    காலை 6 மணி முதல் 12 மணி வரை, 
                               மாலை 4 மணி முதல் இரவு  8 மணி வரை

முகவரி : அருள்மிகு பசுபதீஸ்வரர் திருக்கோயில், பந்தநல்லூர்-609 807 (திருப்பந்தணைநல்லூர்) கும்பகோணம் வட்டம், தஞ்சாவூர் மாவட்டம். 
Ph: 98657 78045

கோவில் சிறப்பு :

* 1000-2000 வருடங்களுக்கு முன் பழமையானது.

* இது 35 வது தேவாரத்தலம் ஆகும்.
.
.* சிவன் புற்றாக அமைந்த சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.

* 7 நிலை ராஜகோபுரத்துடன் இரண்டு பிரகாரங்கள். சுவாமி கிழக்கு நோக்கியும், அம்மன் வடக்கு நோக்கி தவக்கோலத்திலும் உள்ளனர். நுழைவு வாயிலில் கோட்டை முனியாண்டவர் அருள்பாலிக்கிறார். உள்பிரகாரத்தில் நவலிங்கங்கள், முருகன், கஜலட்சுமி, அன்னபூரணி, சரஸ்வதி, சட்டைநாதர், தெட்சிணாமூர்த்தி, நேர்கோட்டில் நவகிரகங்கள் உள்ளன. இத்தல விநாயகர் நிருதி கணபதி என்ற திருநாமத்துடன் அருள்பாலிக்கிறார்


* கண்பார்வையில் குறைபாடு உள்ளவர்கள் இங்குள்ள தீர்த்தத்தில் நீராடி வழிபட்டால் பார்வை நிச்சயம். பித்ருக்களால் ஏற்படும் தோஷம், திருமணத்தடை, மனநிலை பாதிப்பு, பயந்த சுபாவம், கடனால் பாதிக்கப்பட்டவர்கள் இங்கு வழிபாடு செய்தால் பலன் நிச்சயம்.

முந்தைய கோவில்
அடுத்த கோவில்

0 Comments: