வியாழன், 30 ஜூன், 2016

அருள்மிகு நற்றுணையப்பர் திருக்கோவில்(புஞ்சை)



கோவில் பெயர் : அருள்மிகு நற்றுணையப்பர்  திருக்கோவில் 

சிவனின் பெயர்  : நற்றுணையப்பர்

அம்மனின் பெயர் : பர்வத ராஜபுத்திரி, இரண்டு அம்மன்

தல விருட்சம்   : செண்பக, பின்ன மரம்

கோவில் திறக்கும் நேரம் :   காலை  9 மணி முதல் 12 மணி வரை, 
                                              மாலை 5  மணி முதல் இரவு 7 மணி வரை. 

முகவரி : அருள்மிகு நற்றுறணையப்பர் திருக்கோவில் , புஞ்சை 
                      (திருநனிபள்ளி), கிடாரங்கொண்டான் -  நாகை 
மாவட்டம் - 609 304.Ph:04364 - 283 188

கோவில் சிறப்பு : 

* 1000-2000 வருடங்களுக்கு முன் பழமையானது.

* சோழனால் இத்தலம் கட்டப்பட்டது.

* இது 106 வது தேவாரத்தலம் ஆகும்.

* இறைவன் சுயம்புமூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.

* ஆண்டு தோறும் சித்திரை 7 - 13 வரை சூரியனின் கதிர்கள் சிவலிங்கத்தின் மீது படுகிறது.

* கோவில் மூலஸ்தானமும், கோவில் மண்டபங்களும் சிறந்த சிற்ப 
வேலைப்பாடுடன் அமைந்துள்ளது. அத்துடன் "நனிபள்ளி கோடி 
வட்டம்' என்ற மண்டபம் மிகவும் அருமையாக கோவில் 
சுற்றுப்பகுதியில் பிரமாண்டமான தெட்சிணாமூர்த்தி, சுப்பிரமணியர், 
பிரம்மா, லிங்கோத்பவர், மனைவியுடன் சண்டிகேஸ்வரர் உள்ளனர். 
அமைக்கப்பட்டுள்ளது. 

* திருமணத்தில் தடை உள்ளவர்கள் இங்குள்ள கல்யாணசுந்தரரை 
வணங்கினால் விரைவில் திருமணம் நடைபெறும் என்பதும், 
நற்றுணையப்பரை வணங்கினால் செல்வ செழிப்பு, குழந்தைகளின் 
படிப்பு சிறக்கும் என்பதும் நம்பிக்கை.
முந்தைய கோவில்
அடுத்த கோவில்

0 Comments: