வியாழன், 30 ஜூன், 2016

அருள்மிகு தலைச்சங்காடு சங்காரண்யேஸ்வரர் திருக்கோவில்



கோவில் பெயர் : அருள்மிகு சங்காரண்யேஸ்வரர் திருக்கோவில் 

சிவனின் பெயர்  : சங்காரண்யேஸ்வரர்

அம்மனின் பெயர் : சவுந்தர நாயகி

தல விருட்சம்   : புரசு

கோவில் திறக்கும் நேரம் :   காலை  6 மணி முதல் 12 மணி வரை, 
                                                           மாலை 5  மணி முதல் இரவு 7 மணி வரை.

முகவரி : அருள்மிகு சங்காரண்யேஸ்வரர் திருக்கோவில், மேலப்பெரும்பள்ளம், மேலையூர் போஸ்ட் - 609107 (திருவலம்புரம்), தரங்கம்பாடி தாலுகா, நாகப்பட்டினம் மாவட்டம்.
 Ph : 04364 - 280 757

கோவில் சிறப்பு : 

* 1000-2000 வருடங்களுக்கு முன் பழமையானது.

* சோழனால் இத்தலம் கட்டப்பட்டது.

* இது 108 வது தேவாரத்தலம் ஆகும்.

* இத்தலத்து இறைவன் 3 அடி உயரத்தில் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். 

* மூலவரான சங்காரண்யேஸ்வரர் மீது நல்லெண்ணை ஊற்றி விளக்கு வெளிச்சத்தில் பார்த்தால் லிங்கத்தின் மீது மயிர்க்கால்கள் தெரியும்.

* சிறப்புலி நாயனார் அவதரித்த தலமெனப்படுகிறது.


* பழந்தமிழர்கள் இயற்கை தாவரங்களின் பெயரிலேயே நிலத்திற்கும்அதனை சார்ந்த ஊருக்கும் பெயர் வைத்திருக்கின்றனர் .எனவே தலைச்சங்காடு தலை+சங்கு+காடு என பிரித்து பார்த்தால் பொருள் விளங்கும். சங்கு பூக்கள் தோட்டங்களில் மிகுதியாகப் பயிரிட்டு இவ்வூர் கோயில்களுக்கும் இதனை சுற்றியுள்ள கோயில்களுக்கும் மிகுதியாக அனுப்பப்பட்டன. இந்த பூந்தோட்டத்தை ஒட்டியே தலைச்சங்காடு என்ற பெயர் உருவாகி இருக்க வேண்டும் என கல்வெட்டு செய்தி கூறுகிறது.

* குழந்தைப்பேறுக்காக பெண்கள் வருகிறார்கள். அப்படி வரும் பெண்கள் பவுர்ணமி விரதம் இருந்து அம்மனுக்கு செய்யப்பட்ட சந்தனக்காப்பில் இருந்து சிறிதளவு சந்தனம் எடுத்து சாப்பிட்டு குழந்தை பிறக்க வேண்டிக்கொள்கிறார்கள்.
முந்தைய கோவில்
அடுத்த கோவில்

0 Comments: