வெள்ளி, 1 ஜூலை, 2016

அருள்மிகு சித்தநாதேஸ்வரர் திருக்கோவில்


கோவில் பெயர்   : அருள்மிகு  சித்தநாதேஸ்வரர் திருக்கோவில்

சிவனின் பெயர்   :  சிவகுருநாதசுவாமி, சிவபுரீஸ்வரர், 

அம்மனின் பெயர் :  ஆர்யாம்பாள், சிங்காரவல்லி, பெரியநாயகி

தல விருட்சம்     :    செண்பகம்

கோவில் திறக்கும் நேரம் :   காலை 6 மணி முதல் 11 மணி வரை, 
                                                      மாலை  4.30 மணி முதல் இரவு 8 மணி வரை. 

முகவரி : அருள்மிகு சிவகுருநாதசுவாமி திருக்கோவில், 
சிவபுரம்,சாக்கோட்டை அஞ்சல் - 612 401 . கும்பகோணம் வட்டம்.
தஞ்சாவூர் மாவட்டம்.Ph: 098653 06840.

கோவில் சிறப்பு : 

* 1000-2000 வருடங்களுக்கு முன் பழமையானது.

* இது 130 வது தேவாரத்தலம் ஆகும்.

* இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். இங்கு சித்திரை மாதம் 4, 5, 6 ஆகிய தேதிகளில் சூரியனின் ஒளி சுவாமிமீது விழுகிறது. சிவாலயங்களில் அங்கப்பிரதட்சணம் செய்யக்கூடிய சிறப்புமிக்க தலம் இது ஒன்றேயாகும்.

* இத்தல நடராஜர் மிக அழகிய திருவுருவம் கொண்டவர். இத்தல நடராஜப் பெருமானை வெளிநாட்டிற்குக் கடத்தப்பட்டதும், பெரும் வழக்குகளுக்குப்பின் மீண்டும் கிடைத்ததும் உலகப் புகழ் பெற்ற நிகழ்ச்சியாகும். 

* இத்தல முருகப் பெருமான் மீது அருணகிரிநாதர் திருப்புகழ் அருளியுள்ளார்

* தீபாவளி நாளில் இத்தலத்தில் நடக்கும் குபேர பூஜை சிறப்பு மிக்கது. அப்போது வழிபட செல்வ வளம் உண்டாகும் என்பது ஐதீகம். 

* அம்பாள் சிங்காரவல்லி என்னும் ஆர்யாம்பாள். பெரியநாயகி என்றும் பெயருண்டு. குபேரன் தனபதியாக இருந்த போது, அவனுக்கு தந்தையாக இந்திரனும், தாயாக இந்திராணியும், குழந்தையாக அக்னியும் வந்தனர். அவர்கள் பிரகாரத்தில் லிங்க வடிவில் வீற்றிருக்கின்றனர். இங்கு வந்த சம்பந்தர் இத்தலத்தை காலால் மிதிக்க அஞ்சி அங்கப்பிரதட்சணம் செய்து ஆலயத்தை வலம் வந்து சிவனைப் பாடி வழிபட்டார். அதனடிப்படையில், சிவனுக்கு அங்கப் பிரதட்சண வழிபாடு நடக்கிறது. 

* பட்டினத்தாரின் சகோதரி இங்கு வாழ்ந்ததாகச் சொல்வர். அம்மனுக்கு 21 நெய் தீபம் ஏற்றி வழிபட்டு, குழந்தையை சந்நிதியில் கிடத்தி வேண்டிக் கொள்கின்றனர். 

* ஆறுமுகம், பன்னிரண்டு கரங்களுடன் மற்ற கோயில்களில் சண்முகராக காட்சி தரும் முருகன் இங்கு ஒருமுகம், நான்கு கைகளுடன் வீற்றிருப்பது வித்தியாசமான தரிசனம். 
* தட்சிணாமூர்த்தியின் காலடியில் ராகு இருப்பது மற்றொரு சிறப்பம்சம். இவரை வழிபட குரு, நாகதோஷம் நீங்கும். 

* பைரவர் கோயில்: இத்தல பைரவர் தனிக்கோயிலில் காட்சி தருகிறார். இரண்டாம் கோபுர வாசலின் இடப்புறம் கோயில் உள்ளது. 


* குழந்தைப்பேறு வேண்டுபவர்கள் இங்குள்ள அன்னைக்கு அபிஷேக ஆராதனை செய்து, விரதமிருந்து 11 வெள்ளிக்கிழமை அர்ச்சனை செய்ய குழந்தைப் பேறு கிடைக்கப்பெறுவர். குழந்தைகளுக்கு ஏற்படக்கூடிய தோஷங்கள் நீங்கவும், உடல் மெலிவைப் போக்கவும் இங்குள்ள அம்மனிடம் பிரார்த்தனை செய்கின்றனர்.

முந்தைய கோவில்
அடுத்த கோவில்

0 Comments: