வெள்ளி, 1 ஜூலை, 2016

அருள்மிகு திருப்பயற்றுநாதர் திருக்கோவில்


கோவில் பெயர்   : அருள்மிகு திருப்பயற்றுநாதர்  திருக்கோவில்

சிவனின் பெயர்   :  திருப்பயற்றுநாதர் (முத்கபுரீஸ்வரர்)

அம்மனின் பெயர் :  காவியங்கண்ணி (நேத்ராம்பாள்)

தல விருட்சம்     :  சிலந்திமரம்

கோவில் திறக்கும் நேரம் :   காலை 8 மணி முதல் 11 மணி வரை, 
                                                  மாலை  6 மணி முதல் இரவு 8 மணி வரை.

முகவரி : அருள்மிகு திருப்பயற்றுநாதர்/முக்தபுரீஸ்வரர் திருக்கோவில், திருப்பயத்தங்குடி - 610 101.04366 - 272 423, 98658 44677

கோவில் சிறப்பு : 

* 1000-2000 வருடங்களுக்கு முன் பழமையானது.

* இது 141 வது தேவாரத்தலம் ஆகும்.

* இத்தலவிநாயகர் சித்திபுத்தி விநாயகர் எனப்படுகிறார். கோயில் கிழக்கு பார்த்து அமைந்துள்ளது. கோயில் சுற்றுப்பகுதியில் சித்திவிநாயகர், தெட்சிணாமூர்த்தி, பைரவ மகரிஷி, வள்ளி தெய்வானையுடன் முருகன், விசாலாட்சி சமேத விஸ்வநாதர், மகாலட்சுமி, கஜலட்சுமி, சண்டிகேஸ்வரர், வீரமாகாளி, பைரவர், சூரியன், சந்திரன், சோமாஸ்கந்தர் ஆகியோர் சன்னதிகள் உள்ளன.

* இப்பகுதி வியாபாரிகள் தங்கள் வியாபாரம் செழிக்க திருப்பயற்றுநாதரையும், கண் சம்பந்தப்பட்ட நோயால் பாதிக்கப்பட்டவர்கள் அம்மன் காவியங்கண்ணியையும் கருணா தீர்த்தத்தில் நீராடி வழிபடுகின்றனர்.

முந்தைய கோவில்
அடுத்த கோவில்

0 Comments: