வியாழன், 30 ஜூன், 2016

அருள்மிகு சுந்தரேஸ்வர திருக்கோவில் (திருவேட்டக்குடி)கோவில் பெயர்   : அருள்மிகு சுந்தரேஸ்வர திருக்கோவில் 

சிவனின் பெயர்   : சுந்தரேஸ்வரர்

அம்மனின் பெயர் : சாந்தநாயகி

தல விருட்சம்     :     புன்னை


கோவில் திறக்கும் நேரம் :   காலை  6 மணி முதல் 12 மணி வரை, 
                                                      மாலை 4  மணி முதல் இரவு 8 மணி வரை.

முகவரி : அருள்மிகு சுந்தரேஸ்வரர் திருக்கோவில், 
திருவேட்டக்குடி- 609 609. புதுச்சேரி. Ph:04368 - 265 693, 265 691, 98940 51753.

கோவில் சிறப்பு

* 1000-2000 வருடங்களுக்கு முன் பழமையானது.

* சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.

* இது 112 வது தேவாரத்தலம் ஆகும்.

* வில் ஏந்திய வேலவர்: இங்கு உற்சவர் வேடமூர்த்தி கையில் வில் மற்றும் சூலம் ஏந்தியும், அம்பாள் தலையில் பானையை வைத்தபடி வேடன் மனைவி போலவும் காட்சி தருவது வித்தியாசமான தரிசனம்.

*  சிவன் வேடராக வந்தபோது, அவருடன் முருகனையும் அழைத்து வந்தாராம். இதன் அடிப்படையில் இங்கு முருகனும் கையில் வில்லுடன் காட்சியளிக்கிறார். இவர் நான்கு கரங்களுடன் வள்ளி, தெய்வானையுடன் இருக்கிறார். ஒரே தலத்தில் சிவன், முருகன் இருவரையும் வில்லுடன் தரிசனம் செய்வது அபூர்வம். 
* திருஞானசம்மந்தர் பதிகம் பாடிய சிவன், பிரகாரத்தில் தனிச்சன்னதியில் "புன்னைவனநாதராக' அருளுகிறார். இவரது சன்னதியின் முன்புறம் சனீஸ்வரர், சம்மந்தர் இருவரும் இருக்கின்றனர். கிரக தோஷம் உள்ளவர்கள் இங்கு சிறப்பு பூஜைகள் செய்து வேண்டிக்கொள்கிறார்கள்.
* பஞ்ச பாண்டவர்களில் ஒருவனான அர்ஜூனன் தனக்கு பசுபதாஸ்திரம் என்றும் ஆயுதம் வேண்டி கடுந்தவம் புரிந்தார். அவருடைய தவத்தினை பன்றி வடிவில் வந்த அரக்கன் கலைத்தார். அதனால் அரக்கனை அர்ஜூனன் தன்னுடைய வில் அம்பினால் வதம் செய்தார். அந்நேரத்தில் வேறொரு வேடன் தானே பன்றியைக் கொன்றதாகக் கூறி உரிமைக் கொண்டாடினார். இறுதியில் வேடனாக வந்தது சிவபெருமான் என்பதை அர்ஜூனன் உணர்ந்தார். சிவபெருமான் அர்ஜூனனுக்கு ஆயுதங்களில் உயரியதான பசுபதாஸ்திரத்தினை அளித்தார். இத்தலத்தில் முருகனும் வேடன் வடிவத்தில் வில்லேந்தி காட்சிதருகிறார். சிவபெருமானின் மகனான ஐயப்பன் தனது இரு மனைவியர்களுடன் காட்சியளிக்கின்றார்.

* நல்ல நண்பர்கள் கிடைக்க, எதிரிகள் தொல்லை, ஆணவம் நீங்க இங்கு வேண்டிக்கொள்கிறார்கள்.
முந்தைய கோவில்
அடுத்த கோவில்

0 Comments: