கோவில் பெயர் : அருள்மிகு வெள்ளடைநாதர் திருக்கோவில்
சிவனின் பெயர் : வெள்ளடைநாதர்
அம்மனின் பெயர் : காவியங்கண்ணி
தல விருட்சம் : வில்வம்
கோவில் திறக்கும் நேரம் : காலை 6 மணி முதல் 10.30. மணி வரை ,
மாலை 5 மணி முதல் இரவு 7.30 மணி வரை
முகவரி : அருள்மிகு வெள்ளடைநாத சுவாமி திருக்கோவில், திருக்குருகாவூர்-609115, வடகால் போஸ்ட், சீர்காழி தாலுகா,நாகப்பட்டினம் மாவட்டம். Ph 09245 612 705
கோவில் சிறப்பு :
* 1000-2000 வருடங்களுக்கு முன் பழமையானது.
* இது 13 வது தேவாரத்தலம் ஆகும்.
* இறைவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.
* திருஞானசம்பந்தருக்காக இங்கு தை மாத அமாவாசையன்று கங்கை நதி கிணற்றில் பொங்கியது. இதன் அடிப்படையில் தற்போதும் தை அமாவாசையன்று ஒருநாள் மட்டும் இந்த தீர்த்தம் திறக்கப்படுகிறது. அன்று மட்டுமே பக்தர்கள் இதில் நீராட அனுமதிக்கிறார்கள்.
* சிவன் சன்னதி கோஷ்டத்தில் உள்ள விநாயகர் மிகவும் விசேஷமானவர். தாமரை பீடத்தில் அமர்ந்திருக்கும் இவருக்கு மேலே குடையும், இரண்டு சாமரங்களும் இருக்கிறது. பொதுவாக முருகன் கிழக்கு திசை நோக்கித்தான் இருப்பார். ஆனால் இங்குள்ள முருகன், தெற்கு திசை நோக்கி வள்ளி, தெய்வானையுடன் காட்சி தருகிறார். தென் திசையை பார்த்திருப்பதால் இவரை, குரு அம்சமாக கருதி வழிபடுகிறார்கள். இவருக்கு வியாழக்கிழமைகளில் சிறப்பு பூஜைகள் நடக்கிறது. கோஷ்டத்தில் உள்ள சட்டைநாதர், துர்க்கையம்மன் உள்ளனர். இந்த துர்க்கை, எட்டு கைகளுடன் காட்சி தருவது விசேஷம்.
* நவக்கிரக சன்னதி கிடையாது.
* தெரியாமல் செய்த பாவத்தால் வருந்துபவர்கள் இங்கு வேண்டிக்கொள்ள மன அமைதி கிடைக்கும் என்பது நம்பிக்கை. இங்கு சிவனிடம் வேண்டிக்கொள்ள அன்னத்திற்கு குறையில்லாத நிலை ஏற்படும் என்பது நம்பிக்கை.
0 Comments: