கோவில் பெயர் : அருள்மிகு விஜயநாதேஸ்வரர் திருக்கோவில்
சிவனின் பெயர்  : விஜயநாதேஸ்வரர் ( விஜயநாதர்)
அம்மனின் பெயர் :மங்கள நாயகி (மங்கை நாயகி, மங்களாம்பிகை)
கோவில் திறக்கும் நேரம் :    காலை 6.மணி முதல் 1. மணி வரை, 
                               மாலை 4 மணி முதல் இரவு  8.30. மணி வரை
முகவரி : அருள்மிகு விஜயநாதேஸ்வரர் திருக்கோவில், திருவிஜயமங்கை-612 301. தஞ்சாவூர் மாவட்டம்.
கோவில் சிறப்பு :
* 1000-2000 வருடங்களுக்கு முன் பழமையானது.
* இக்கோயில் சோழர்களால் கட்டப்பட்டது
* இது 47 வது தேவாரத்தலம் ஆகும்.
.* சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.
* ஆயுள் விருத்திக்காகவும், ஆயுள் தோஷம், நோயால் பாதிக்கப்பட்டோர் குணமடையவும் இங்கு வேண்டிக்கொள்கிறார்கள். செயல்களில் வெற்றி பெற, தேர்வில் நல்ல மதிப்பெண் பெற விஜயநாதரை வழிபட்டு வரலாம். திருமணத்தடை உள்ளவர்கள் வழிபாடு செய்து பலனடைகிறார்கள்
* பஞ்சபாண்டவர்களில் ஒருவரான அர்ஜுனன்(விஜயன்) வழிபட்ட தலம். இதனால் ஈசனுக்கு விஜயநாதர் எனபெயர் வந்தது.
* சிவலிங்கத் திருமேனியின்மீது பசு தானே பாலை சுரந்து வழிபட்ட தலம். குருஷேத்திரப் போரின் போது அர்ஜூனன் பாசுபதாஸ்திரம் ஈசனிடம் பெற வேண்டி இவ்வாலயத்தில் கடும் தவம் செய்தார். பாசுபதாஸ்திரத்தை அர்ஜூனன் பெற்றால் பெரும் ஆபத்து என்பதை உணர்ந்த துரியோதனன் முகாசுரன் என்பவனை அனுப்பி தவத்தைக் கலைக்கச் சொன்னான். முகாசுரன் பன்றியின் உருவெடுத்து அர்ஜூனனைத் தாக்க பாய்ந்த போது பக்தனை காப்பாற்ற நினைத்த ஈசன் வேடன் உருகொண்டு பன்றியைக் கொன்றார். பன்றியை கொன்றது குறித்து சொற்போரும் விற்போரும் நடந்தது. அர்சுனன் வில் முறிந்தது. முறிந்த வில் கொண்டு வேடன்முடி நோக்கி அம்பு எய்தார் முடியில் பட்ட அம்பு, உலக உயிர்கள் அனைத்தின் மீதும் பட்டது. அர்ஜுனன் முன் இறைவன் தோன்றினார். அர்ஜுனன் தன் செயலுக்கு மன்னிப்பு கேட்டு பணிந்தார். ஈசன் விஜயனான அர்ஜூனனுக்கு பாசுபதாஸ்திரத்தை அருளினார். இன்றும் இவ்வாலய லிங்கத் திருமேனியில் அம்பு பட்ட தழும்பு கோடு போல் காணப்படுகிறது. திருஞானசம்பந்தரும், திருநாவுக்கரசரும் தொழ வரும்பொழுது கொள்ளிடத்தில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. எனவே தென்கரையில் இருந்தபடியே பதிகம் பாடினர். அப்போது இவர்களுக்கு காட்சி தரும் பொருட்டு விநாயகரும் முருகபெருமானும் தெற்கு நோக்கி திரும்பினர். இன்றும் இவ்வாலய விநாயகரும் முருகரும் தென்திசை நோக்கி இருப்பதைக் காணலாம்.
* ஆயுள் விருத்திக்காகவும், ஆயுள் தோஷம், நோயால் பாதிக்கப்பட்டோர் குணமடையவும் இங்கு வேண்டிக்கொள்கிறார்கள். செயல்களில் வெற்றி பெற, தேர்வில் நல்ல மதிப்பெண் பெற விஜயநாதரை வழிபட்டு வரலாம். திருமணத்தடை உள்ளவர்கள் வழிபாடு செய்து பலனடைகிறார்கள்

0 Comments: