வெள்ளி, 1 ஜூலை, 2016

அருள்மிகு ஆபத்சகாயேஸ்வரர் திருக்கோவில்


கோவில் பெயர்   : அருள்மிகு  ஆபத்சகாயேஸ்வரர் திருக்கோவில்

சிவனின் பெயர்   :  ஆபத்சகாயேஸ்வரர், காசி ஆரண்யேஸ்வரர்,

அம்மனின் பெயர் :  ஏலவார்குழலி

தல விருட்சம்     :   பூளை என்னும் செடி

கோவில் திறக்கும் நேரம் :   காலை 6 மணி முதல் 1 மணி வரை, 
                                                மாலை  4 மணி முதல் இரவு 8.30 மணி வரை. 

முகவரி : அருள்மிகு ஆபத்சகாயேஸ்வரர் திருக்கோவில், 
ஆலங்குடி அஞ்சல் - 612801.  Ph:04374-269 407

கோவில் சிறப்பு : 

* 1000-2000 வருடங்களுக்கு முன் பழமையானது.

* இது 161 வது தேவாரத்தலம் ஆகும்.

*  இங்கு மூலவர் ஆபத்சகாயர் சுயம்புலிங்கமாக அருள்பாலிக்கிறார். (இத்தலத்தில் தெட்சிணாமூர்த்தி விசேஷம் - குருதக்ஷிணாமூர்த்தி, ஆதலின் இதைத் தெட்சிணாமூர்த்தித் தலம் என்பர்.) விசுவாமித்திரர், முசுகுந்தர், வீரபத்திரர் பூசித்த தலம். அம்பிகை இத்தலத்தில் தோன்றித் தவம் செய்து இறைவனைத் திருமணம் புரிந்து கொண்ட தலம்.

* நாகதோஷம் நீங்கவும், பயம், குழப்பம் நீங்க இங்குள்ள விநாயகரையும், திருமணத்தடை நீங்கவும், கல்வி, கேள்விகளில் சிறந்து விளங்கவும் இங்கு பிரார்த்தனை செய்கின்றனர்.  
முந்தைய கோவில்
அடுத்த கோவில்

0 Comments: