ஞாயிறு, 10 ஜூலை, 2016

அருள்மிகு அவிநாசியப்பர் திருக்கோவில்கோவில் பெயர்   : அருள்மிகு அவிநாசியப்பர் திருக்கோவில்

சிவனின் பெயர்   : அவிநாசி ஈஸ்வரர்(அவிநாசிநாதர், பெருங்கேடிலியப்பர்)

அம்மனின் பெயர் :  கருணாம்பிகை, பெருங்கருணை நாயகி

தல விருட்சம்     : பாதிரிமரம்

கோவில் திறக்கும் நேரம் :   காலை 5 மணி முதல் 1 மணி வரை, 
                              மாலை  4 மணி முதல் இரவு 8 மணி வரை. 

முகவரி : அருள்மிகு அவிநாசியப்பர் திருக்கோவில், அவிநாசி - 638 654, திருப்பூர் மாவட்டம்.Ph:04296 - 273 113, 94431 39503.

கோவில் சிறப்பு : 

* 1000-2000 வருடங்களுக்கு முன் பழமையானது.

* இது 205 வது தேவாரத்தலம் ஆகும்.


* இத்தல இறைவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். கோயிலின் தலவிருட்சமான பாதிரிமரம் பிரமோற்ஸவத்தின் போது மட்டுமே பூக்கும் தன்மையுடையது. மற்ற காலங்களில் பூக்காது. மரத்தின் இத்தகைய இயல்பானது, இறைவனின் மீது தலவிருட்சம் கொண்டுள்ள பக்தியை காட்டுகிறது என தலபுராணம் கூறுகிறது.

* இங்குள்ள இறைவனை வழிபட்டால் மீண்டும் பிறவாத்தன்மை கிடைக்கும். அழியாப்புகழ் கிடைக்கும் என்பது நம்பிக்கை. சனிதோஷத்தால் பாதிக்கப்பட்டவர்கள் இங்குள்ள சனிபகவானை வழிபாடு செய்தால் தோஷத்தின் பாதிப்பு குறையும் என்பது நம்பிக்கை.

முந்தைய கோவில்
அடுத்த கோவில்

0 Comments: