வியாழன், 28 ஜூலை, 2016

அருள்மிகு தான்தோன்றீஸ்வரர் திருக்கோவில்

கோவில் பெயர்   : அருள்மிகு தான்தோன்றீஸ்வரர்   திருக்கோவில்

சிவனின் பெயர்   :  தான்தோன்றீஸ்வரர்

அம்மனின் பெயர் :  சவுந்தர்யநாயகி

தல விருட்சம்     :  வில்வம்

கோவில் திறக்கும் : காலை 6 மணி முதல் 12 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 7.30 மணி வரை திறந்திருக்கும்.

முகவரி : அருள்மிகு ஊன்றீஸ்வரர் திருக்கோயில், பூண்டி-602 023, திருவள்ளூர் மாவட்டம்.Ph: 044 2763 9725, 2763 9895.
Ph:0 4561 - 221 810, 94420 43493.

கோவில் சிறப்பு : 

* 1000-2000 வருடங்களுக்கு முன் பழமையானது.

வாமி சன்னதி முன்மண்டபத்தில் உள்ள தூணில் ஒரு அங்குல அளவே உள்ள குட்டி விநாயகர் சிற்பம் இருக்கிறது. இந்த சிலையில் கண் இமை, விரல் நகங்களும் துல்லியமாகத் தெரியும்படி நேர்த்தியாக சிற்ப வேலைப்பாடு செய்யப்பட்டிருப்பது சிறப்பு. சுவாமி சன்னதி கோஷ்டத்திலுள்ள தெட்சிணாமூர்த்தி, தலையில் கிரீடம் அணிந்து காட்சி தருவது வித்தியாசமான அம்சம். அம்பாள் சன்னதி எதிரிலுள்ள ஒரு தூணில் சிம்ம வாகனத்தில் அமர்ந்த வாராஹி சிற்பம் இருக்கிறது.நகரத்தார் திருப்பணி செய்த கோயில்களில் இதுவும் ஒன்று.

* இங்குள்ள பைரவர் சொர்ண ஆகர்ஷண பைரவர் எனப்படுகிறார்.இரட்டை நாய் வாகன பைரவர் இருப்பது சிறப்பம்சம். தலவிநாயகரின் திருநாமம் வரசித்தி விநாயகர். நடராஜர், காசி விஸ்வநாதர், விசாலாட்சி, பெருமாள், மகாலட்சுமி, முருகன், சனீஸ்வரர் மற்றும் நவக்கிரக சன்னதிகள் உள்ளன.

* குடும்பத்தில் ஐஸ்வர்யம் பெருக, திருமண, புத்திர தோஷங்கள் நீங்க இங்கு வேண்டிக்கொள்கிறார்கள்.தீராத நோய் மற்றும் கிரக தோஷம் நீங்க இங்குள்ள பைரவரிடம் வேண்டிக் கொள்கிறார்கள். திருமணத்தடையுள்ள பெண்கள் வாராகிக்கு சந்தனக்காப்பு செய்து, நெய்தீபம் ஏற்றி வழிபடுகிறார்கள்.
முந்தைய கோவில்
அடுத்த கோவில்

0 Comments: