சனி, 2 ஜூலை, 2016

அருள்மிகு ஜகதீஸ்வரர் திருக்கோவில்


கோவில் பெயர்   : அருள்மிகு ஜகதீஸ்வரர்  திருக்கோவில்

சிவனின் பெயர்   : ஜகதீஸ்வரர்

அம்மனின் பெயர் :  ஜகன் நாயகி (பெண்ணமிர்த நாயகி)

தல விருட்சம்     :   நாரத்தை மரம்

கோவில் திறக்கும் நேரம் :   காலை 8 மணி முதல் 11 மணி வரை, 
                              மாலை  4.30 மணி முதல் இரவு 8 மணி வரை

முகவரி : அருள்மிகு ஜகதீஸ்வரர் திருக்கோவில், ஓகைப்பேரையூர்- 610 102 (திருப்பேரையூர்) திருவாரூர் மாவட்டம்.Ph:04367 - 237 69

கோவில் சிறப்பு : 

* 1000-2000 வருடங்களுக்கு முன் பழமையானது.

* இது 178 வது தேவாரத்தலம் ஆகும்.

* இத்தல இறைவன் சுயம்பு லிங்கமாக அருள்பாலிக்கிறார். 

* 3 நிலை ராஜ கோபுரம், ஒரு பிரகாரத்துடன் கிழக்கு நோக்கிய கோயில். உள்பிரகாரத்தில் கற்பக விநாயகர், முருகன், மகாலட்சுமி, பைரவர், அய்யனார், சூரியன், சந்திரன், துர்க்கை, லிங்கோத்பவர் ஆகிய சன்னதிகள் உள்ளன. இத்தலத்தினை சுற்றிலும் தென்கிழக்கே தலையாலங்காடு, வடமேற்கே திருநாட்டியத்தான்குடி, தென்மேற்கே திருவாரூர், வடகிழக்கே திருவெண்டுதுறை ஆகிய பாடல் பெற்ற தலங்கள் உள்ளன.

* வெண்குஷ்ட நோயால் பாதிக்கப்பட்டவர்கள் இங்குள்ள அக்னி தீர்த்தத்தில் நீராடி வழிபட்டால் விரைவில் குணமாகும் என்பது நம்பிக்கை.
முந்தைய கோவில்
அடுத்த கோவில்

0 Comments: