புதன், 27 ஜூலை, 2016

அருள்மிகு கச்சிஅனேகதங்காவதேஸ்வர திருக்கோவில்

கோவில் பெயர்   : அருள்மிகு கச்சிஅனேகதங்காவதேஸ்வர திருக்கோவில்

சிவனின் பெயர்   :  கச்சிஅனேகதங்காவதேஸ்வரர்

அம்மனின் பெயர் :  காமாட்சி

கோவில் திறக்கும் : காலை 6 மணி முதல் 8 மணி வரை
 மட்டுமே நடைதிறந்திருக்கும். பிறநேரங்களில் சுவாமியை வெளியில் இருந்து தரிசிக்கலாம்.

முகவரி : அருள்மிகு கச்சிஅனேகதங்காவதேஸ்வரர் திருக்கோவில், அனேகதங்காவதம் - 631 501. காஞ்சிபுரம் மாவட்டம்.Ph: 044 - 2722 2084.

கோவில் சிறப்பு : 

* 1000-2000 வருடங்களுக்கு முன் பழமையானது.

* இது 236 வது தேவாரத்தலம் ஆகும்.

* இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார், விநாயகர், வல்லபையை மணம் முடித்த தலம் என்றாலும் இங்கு தனிச்சன்னதியில் விநாயகர் மட்டுமே இருக்கிறார். அவருடன் வல்லபை இல்லை. திருமணத்தடை உள்ளவர்கள் இவருக்கு அருகம்புல் சாத்தி, நைவேத்யங்கள் படைத்து வழிபடுகிறார்கள். இதனால் விரைவில் திருமணம் நடக்கும் என நம்புகின்றனர்.

* இங்கு வேண்டிக்கொள்ள பணி, பதவி உயர்வு கிடைக்கும், தடைபட்ட திருமணங்கள் நடக்கும் என்பது நம்பிக்கை.
முந்தைய கோவில்
அடுத்த கோவில்

0 Comments: