கோவில் பெயர் : அருள்மிகு கைச்சின்னேஸ்வரர் திருக்கோவில்
சிவனின் பெயர் : கைச்சினநாதர்
அம்மனின் பெயர் : பல்வளை நாயகி
தல விருட்சம் : கொங்கு, இலவம்
கோவில் திறக்கும் நேரம் : காலை 6 மணி முதல் 12 மணி வரை,
மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை.
முகவரி : அருள்மிகு கைச்சின்னேஸ்வரர் திருக்கோயில், (திருக்கைச்சின்னம்)கச்சனம்-610 201. திருவாரூர் மாவட்டம்.Ph:0 94865 33293
கோவில் சிறப்பு :
* 1000-2000 வருடங்களுக்கு முன் பழமையானது.
* இது 186 வது தேவாரத்தலம் ஆகும்.
* இத்தல இறைவன் சுயம்பு லிங்கமாக அருள்பாலிக்கிறார். சிவாலயங்களில் பெருமாள் சன்னதியும் இணைந்திருப்பது ஒரு சில இடங்களில் மட்டுமே இருக்கும். இங்கு சீனிவாசப் பெருமாள் அருள்பாலிக்கிறார்.
* கோயிலின் கோஷ்டத்தில் துர்க்கை, சரஸ்வதி, ஜேஷ்டாதேவி ஆகியோர் உள்ளனர். இவர்களை அடுத்து தனி சன்னதியில் மகாலட்சுமி உள்ளார்.
* தவறு செய்தவர்கள் மனம் வருந்தி சுவாமியிடம் வேண்டிக்கொண்டால் அவர்களது பாவத்தை சிவன் மன்னித்து அருள்கிறார் என்பது நம்பிக்கை.
0 Comments: