ஞாயிறு, 10 ஜூலை, 2016

அருள்மிகு குற்றாலநாதர் திருக்கோவில்


 
கோவில் பெயர்   : அருள்மிகு குற்றாலநாதர் திருக்கோவில்

சிவனின் பெயர்   : குற்றாலநாதர் 

அம்மனின் பெயர் :  குழல்வாய்மொழி, பராசக்தி (இரண்டு அம்மன் சன்னதிகள்)

தல விருட்சம்     :  குறும்பலா

கோவில் திறக்கும் நேரம் :   காலை 6 மணி முதல் 12 மணி வரை, 
                              மாலை  4 மணி முதல் இரவு 7.30 மணி வரை. 

முகவரி : அருள்மிகு குற்றாலநாதசுவாமி திருக்கோவில், 
குற்றாலம் - 627 802. திருநெல்வேலி மாவட்டம்.
Ph:04633-283 138, 210 138.

கோவில் சிறப்பு : 

* 1000-2000 வருடங்களுக்கு முன் பழமையானது.

* இது 203 வது தேவாரத்தலம் ஆகும்.


* இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார் 64 சக்தி பீடத்தில் இது, "பராசக்தி பீடம்' ஆகும். இத்தலத்தில் உள்ள தலமரம் லிங்க வடிவ பலாச்சுளை காய்கிறது இத்தலத்தில் உள்ள தலமரம் பலா மரத்தில் வருடத்தின் அனைத்து நாட்களிலும், பலா காய்த்துக் கொண்டிருக்கும். இதை யாரும் பறிப்பதில்லை. இந்த பலாவில் உள்ள சுளைகள், "லிங்க'த்தின் வடிவில் இருப்பது கலியுக அதிசயம்.

* இத்தலவிநாயகர் வல்லபகணபதி என்று அழைக்கப்படுகிறார். பிரகாரத்திலுள்ள முருகன், கையில் வில்லேந்தியபடி காட்சி தருகிறார். இவருடன் வள்ளி, தெய்வானை இருவரும் ஒருவரை ஒருவர் நேருக்கு நேர் பார்த்தபடி இருக்கின்றனர். 

* குற்றால அருவி நீர் விழும் பாறையில், பல சிவலிங்க வடிவங்கள் பொறிக்கப்பட்டுள்ளது. அபிஷேகப் பிரியரான சிவனுக்கு, எப்போதும் அபிஷேகம் நடக்க வேண்டுமென்பதன் அடிப்படையில் இவ்வாறு செதுக்கியிருக்கிறார்கள். சிவனுக்கு அபிஷேகம் செய்யப்பட்டதாகக் கருதப்படும் இந்த தீர்த்தத்தில் நீராடுவது மேலான புண்ணியத்தைத் தரும். 

* பிரகாரத்தில் அகத்தியர் சன்னதிக்கு எதிரில் அவரது சீடர், சிவாலய முனிவருக்கு சன்னதி இருக்கிறது. இந்த சன்னதியில், சிவாலய முனிவர் சிலை, அகத்தியரின் பாதத்திற்கு கீழே இருக்கும்படியாக அமைக்கப்பட்டிருக்கிறது. குருவிற்கு மரியாதை தரும்விதமாக இவ்வாறு அமைக்கப்பட்டிருப்பதாகச் சொல்கிறார்கள்.

* புத்தி சுவாதீனம் இல்லாதவர்களும், தோல் சம்பந்தப்பட்ட நோயால் பாதிக்கப்பட்டவர்களும் குற்றால அருவியில் நீராடி குற்றால நாதரை வழிபட்டால் சிறந்த பலன் கிடைக்கும். தீராத தலைவலி உள்ளவர்கள் இங்கு சிவனை வழிபட்டு, தைல பிரசாதம் பெற்றுச் செல்கிறார்கள். இதை தேய்த்துக் கொண்டால் தலைவலி பிரச்னை நீங்குவதாக நம்பிக்கை.


முந்தைய கோவில்
அடுத்த கோவில்

0 Comments: