வெள்ளி, 29 ஜூலை, 2016

அருள்மிகு நாவலடி கருப்பசாமி திருக்கோவில்

கோவில் பெயர்   : அருள்மிகு  நாவலடி கருப்பசாமி திருக்கோவில்

அம்மனின் பெயர் :  செல்லாண்டியம்மன்

தல விருட்சம்     : நாவல்

கோவில் திறக்கும் : அதிகாலை 4 மணியில் இருந்து இரவு 10 மணி வரையில் தொடர்ந்து கோயில் திறந்திருக்கும்.

முகவரி : அருள்மிகு நாவலடி கருப்பசாமி திருக்கோவில்
மோகனூர் - 637 015. நாமக்கல் மாவட்டம்.Ph: 04286 - 256 400, 256 401, 255 390.

கோவில் சிறப்பு : 

* 1000-3000 வருடங்களுக்கு முன் பழமையானது.

* இக்கோயிலின் பிரதான வாசல் வடக்கு திசையில் உள்ளது. இந்த வாசலுக்கு நேரே அம்பாள் செல்லாண்டியம்மன் இருக்கிறாள். பீடத்தில் அமர்ந்திருக்கும் இவள் கைகளில் உடுக்கை, சூலம், மலர் மற்றும் குங்குமம் வைத்து, அசுரனை சம்ஹாரம் செய்தபடி காட்சி தருகிறார். முன்மண்டபத்தில் சப்தகன்னியர் இருக்கின்றனர். கோயில் முகப்பில் கருப்பசாமிக்குரிய மூன்று குதிரை வாகனங்கள் இருக்கிறது. இதற்கு அருகில் நந்தி, சிம்மம், குதிரை ஆகிய மூன்று வாகனங்கள் இருக்கிறது.கோயில் வளாகத்திலுள்ள நாவல் மரத்திற்கு அடியில் காவல் தெய்வங்கள் இருக்கிறது. கருப்பசாமி உற்சவர் தனிச்சன்னதியில் நாய் வாகனத்துடன் இருக்கிறார். இவருடன் மனைவியர் பொம்மி மற்றும் வெள்ளையம்மாள் இருக்கின்றனர். மரத்தால் செய்யப்பட்டிருக்கும் இவரே விழாக்காலங்களில் வீதியுலா செல்கிறார்.

* பிறரால் ஏமாற்றப்பட்டவர்கள் இங்கு அதிகளவில் வேண்டிக் கொள்கிறார்கள்.
முந்தைய கோவில்
அடுத்த கோவில்

0 Comments: