வியாழன், 28 ஜூலை, 2016

அருள்மிகு பள்ளிகொண்ட பெருமாள் திருக்கோவில்


கோவில் பெயர்   : அருள்மிகு பள்ளிகொண்ட பெருமாள் திருக்கோவில்

பெருமாள் பெயர்   :  பள்ளி கொண்ட பெருமாள்

அம்மனின் பெயர் :  ரங்கநாயகி

கோவில் திறக்கும் : காலை 8 மணி முதல் 12 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

முகவரி : அருள்மிகு பள்ளிகொண்ட பெருமாள் திருக்கோவில், பள்ளிகொண்டான் - 635 809. வேலூர் மாவட்டம்.
Ph: 94439 89668, 94436 86869.

கோவில் சிறப்பு :

*  1000 To 5000 வருடங்களுக்கு முன் பழமையானது.

* பெருமாளுக்கு உதவியாக வைகுண்டத்தில் இருந்து வந்த ஆதிசேஷன், இத்தலத்தில் தான் முதல்முறையாக அவரைத் தன்னில் சயனிக்க வைத்தார் என்கிறது தலபுராணம். பின்னர் பெருமாள் பாற்கடலில் பள்ளி கொண்டதால், இத்தலத்து ஆறுக்கும் "பாலாறு' என்று பெயர் ஏற்பட்டது. இத்தலத்தில் ஒருநாள் இரவு தங்கி பெருமாளை வழிபட்டால் மோட்சம் கிடைக்கும் என பிரமாண்ட புராணம் கூறுகிறது. மூலவரின் திருமேனி சாளக்கிராமத்தால் ஆனது.

* தடைபடும் திருமணங்கள் சிறப்பாக நடக்கவும், பிரிந்த தம்பதியர் ஒன்றாக சேரவும் இங்கு பிரார்த்திக்கிறார்கள்.
முந்தைய கோவில்
அடுத்த கோவில்

0 Comments: