செவ்வாய், 12 ஜூலை, 2016

அருள்மிகு பனங்காட்டீஸ்வரர் திருக்கோவில்


கோவில் பெயர்   : அருள்மிகு பனங்காட்டீஸ்வரர் திருக்கோவில்

சிவனின் பெயர்   :  பனங்காட்டீஸ்வரர்

அம்மனின் பெயர் :  சத்யாம்பிகை, புறவம்மை

தல விருட்சம்     :   பனை

கோவில் திறக்கும் : காலை 6 மணி முதல் 11 மணி வரை, 
மாலை 4 மணி முதல் இரவு 8.30 மணி வரை.          

முகவரி : அருள்மிகு பனங்காட்டீஸ்வரர் திருக்கோவில், 
பனையபுரம் அஞ்சல் - 605 603 (வழி) முண்டியம்பாக்கம், 
விழுப்புரம் மாவட்டம்.
Ph:99420 5678

கோவில் சிறப்பு : 

* 1000-2000 வருடங்களுக்கு முன் பழமையானது.

* இது 231 வது தேவாரத்தலம் ஆகும்.

* இங்கு மூலவர் பனங்காட்டீஸ்வரர் சுயம்புமூர்த்தியாக அருள்பாலிக்கிறார். ஆண்டுதோறும் சித்திரைத் திங்கள் முதல் ஏழு நாட்களில் ஒவ்வொரு நாள் காலையிலும் சூரிய கதிர்கள் முதலில் சுவாமி மீதும், பின்பு அம்பிகை மீதும் விழுகின்றன.

*இத்தலத்தில் மூன்று கல்வெட்டுக்கள் உள்ளன. முதலாம் குலோத்துங்க சோழன், கோனேரின்மை கொண்டான், பரகேசரி ஆதிராஜேந்திர தேவன் முதலிய அரசர்கள் கல்வெட்டுக்கள் உள்ளன. கல்வெட்டுக்களில் இக்கோவில் திருப்புறவார்பனங்காடுடையார் கோவில் எனவும், இறைவன் பெயர் திருப்பனங்காட்டுடைய மகாதேவர் என்றும் குறிக்கப்பட்டுள்ளது.

* திருமணத்தடை நீங்கவும், குழந்தைப்பேறு வேண்டியும், கல்வி,கேள்விகளில் சிறந்து விளங்கவும் இத்தல இறைவனிடம் பிரார்த்தனை செய்து கொள்கின்றனர்.
முந்தைய கோவில்
அடுத்த கோவில்

0 Comments: