செவ்வாய், 12 ஜூலை, 2016

அருள்மிகு பஞ்சனதீஸ்வரர் திருக்கோவில்கோவில் பெயர்   : அருள்மிகு பஞ்சனதீஸ்வரர்   திருக்கோவில்

சிவனின் பெயர்   :  வடுகீஸ்வரர் (பஞ்சனதீஸ்வரர்)

அம்மனின் பெயர் :   திரிபுரசுந்தரி

தல விருட்சம்     :   வன்னி

கோவில் திறக்கும் : காலை 6 மணி முதல் 11 மணி வரை, 
மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை.      

முகவரி : அருள்மிகு பஞ்சனதீஸ்வரர் திருக்கோவில்
கண்டமங்கலம் வழி, திருவாண்டார்கோயில்-Po
புதுச்சேரி- 605 102.Ph: 99941 9041

கோவில் சிறப்பு :

* 1000-2000 வருடங்களுக்கு முன் பழமையானது.

* இது 227 வது தேவாரத்தலம் ஆகும்.

* வடுகீஸ்வரர் சுயம்புலிங்கமாக இடது பக்கம் சற்றே சாய்ந்தவாறு காட்சியளிக்கிறார். லிங்கத்தின் மீது வடுக்கள் உள்ளது. இவரை மரியாதை செய்யும்பொருட்டு தலையில் தலைப்பாகை அணிவித்துள்ளனர்.

* கோஷ்டத்தில் உள்ள தெட்சிணாமூர்த்திக்கு வெள்ளை வஸ்திரம் சாத்தி பூஜிக்கிறார்கள். பிரம்மா, சிவனை வழிபட்ட சிற்பம் இவருக்கு அருகில் இருக்கிறது. பிரம்மாவிற்கு அருகில் ஆஞ்சநேயரும் இருப்பது விசேஷமான அமைப்பாகும். முன்மண்டபத்தில் இரண்டு நாகங்களின் மத்தியில் கிருஷ்ணர் நின்ற கோலத்தில் காட்சி தருகிறார். திருமண தோஷம் உள்ளவர்கள் இவருக்கு சிவப்பு வஸ்திரம் சாத்தி, தாலி கட்டி வழிபடுகிறார்கள். இதனால், தோஷம் நீங்குவதாக நம்பிக்கை.

* பணிஉயர்வு கிடைக்க, ஆணவம் அழிய அதிகளவில் வேண்டிக்கொள்கிறார்கள்.
முந்தைய கோவில்
அடுத்த கோவில்

0 Comments: