கோவில் பெயர் : அருள்மிகு கொடுங்குன்றநாதர் திருக்கோவில்
(பிரான்மலை)
சிவனின் பெயர் : கொடுங்குன்றநாதர், விஸ்வநாதர், மங்கைபாகர்
அம்மனின் பெயர் : குயிலமுதநாயகி, விசாலாட்சி, தேனாம்பாள்
தல விருட்சம் : உறங்காப்புளி
கோவில் திறக்கும் நேரம் : காலை 6 மணி முதல் 12 மணி வரை,
மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை.
மலை மீதுள்ள மங்கைபாகர் சன்னதி மட்டும் மாலையில் 6.30 வரை திறந்திருக்கும்.
முகவரி : அருள்மிகு கொடுங்குன்றநாதர் திருக்கோவில்,
பிரான்மலை - 630 502. சிவகங்கை மாவட்டம்.Ph:04577 - 246 170, +91-94431 91300.
கோவில் சிறப்பு :
* 1000-2000 வருடங்களுக்கு முன் பழமையானது.
* 195 தேவாரத்தலம் ஆகும்.
* இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார் .
* இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். (ஐப்பசி முதல் பங்குனி வரையில்), சிவன் மீது சூரிய ஒளி விழுகிறது. இவ்வாறு சூரிய ஒளி விழுவதைக் காண்பது அபூர்வம். இத்தல இறைவன் சுயம்பு லிங்கமாக அருள்பாலிக்கிறார். பாதாளம், பூமி, மலை என மூன்றடுக்கு கொண்டதாக இக்கோயில் அமைந்துள்ளது.
* இத்தலத்தின் விருட்சம் உறங்காப்புளி மரமாகும். பல நூற்றாண்டுகளாக இருக்கும் இம்மரம் பூக்கும், காய்க்கும். ஆனால், பழுக்காது. காய்ந்த நிலையிலேயே புளியங்காய், கீழே உதிர்ந்து விடும். இதன் இலைகள் எப்போதும் விரிவடைந்த நிலையிலேயே இருக்கும். இதுதவிர, மங்கைபாகர் சன்னதிக்கு மேலே ஒரு பாறையில் "பெயரில்லா விருட்சம்' என்ற பெயரில் ஒரு செடி உள்ளது. இதற்கு பெயர் கிடையாது என்பதால், இவ்வாறு அழைக்கிறார்கள். இந்த செடியும் பூப்பதில்லை.
* கருத்து வேறுபாடுள்ள தம்பதியர்கள் இங்கு வேண்டிக் கொள்ள ஒற்றுமை உண்டாகும் என்பது நம்பிக்கை. ஜாதகத்தில் சுக்கிரன் தொடர்பான தோஷம் உள்ளவர்கள், இங்கு அம்பிகையிடம் வேண்டிக்கொள்கிறார்கள்.
0 Comments: