வெள்ளி, 1 ஜூலை, 2016

அருள்மிகு பொன்வைத்தநாதர் திருக்கோவில்


கோவில் பெயர்   : அருள்மிகு பொன்வைத்தநாதர் திருக்கோவில்

சிவனின் பெயர்   : பொன்வைத்த நாதர் (சொர்ணஸ்தாபனேஸ்வரர்)

அம்மனின் பெயர் :  அகிலாண்டேஸ்வரி

தல விருட்சம்     :   ஆத்திமரம்

கோவில் திறக்கும் நேரம் :   காலை 8 மணி முதல் 12 மணி வரை, 
                                                    மாலை  5 மணி முதல் இரவு 8.30 மணி வரை. 

முகவரி : அருள்மிகு பொன்வைத்தநாதர் திருக்கோவில், சித்தாய்மூர்-610 203. பொன்னிரை, திருவாரூர் மாவட்டம்.Ph: 94427 67565

கோவில் சிறப்பு : 

* 1000-2000 வருடங்களுக்கு முன் பழமையானது.

* இது 169 வது தேவாரத்தலம் ஆகும்.

* இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். 

* முன்னொரு காலத்தில் பிரம்ம ரிஷி என்பவர், இத்தலத்தில் அர்த்தஜாம பூஜை செய்வதை கடமையாக கொண்டிருந்தார். ஒரு முறை இவர் வருவதற்குள் கோயில் நடை சாத்தப்பட்டு விட்டது. எனவே இவர் தேனீ வடிவம் எடுத்து சிறு ஓட்டை வழியாக உள்ளே சென்று இறைவனை தரிசித்தார். இவருடன் வந்த மற்ற ரிஷிகளும் இவ்வாறே தரிசனம் செய்தனர். இன்றும் கூட கோயில் அர்த்த மண்டபத்தில் தேனீக்கள் கூடு கட்டி இருப்பதை காணலாம். இந்த தேன் கூட்டிற்கு நாள் தோறும் பூஜை நடக்கிறது

* இத்தல இறைவனைஅகத்தியர், இந்திரன், நாகராஜன், பிரம்மா ஆகியோர் பூஜை செய்துள்ளனர். இத்தலவிநாயகர் ஆத்திமரவிநாயகர் என்ற பெயரில் அருள்பாலிக்கிறார்.

* கப்பிரசவம் வேண்டுபவர்கள் இங்கு வழிபாடு செய்தால் பலன் நிச்சயம். செல்வம் வேண்டுபவர்கள் பொன்வைத்த நாதரை வழிபட்டால் செல்வம் கொழிக்கும் என்பது நம்பிக்கை.

முந்தைய கோவில்
அடுத்த கோவில்

0 Comments: