சனி, 9 ஜூலை, 2016

அருள்மிகு சுந்தரராஜ பெருமாள் திருக்கோவில் , வேம்பத்தூர்

கோவில் பெயர்   : அருள்மிகு சுந்தரராஜ பெருமாள் திருக்கோவில்

சிவனின் பெயர்   : அருள்மிகு சுந்தரராஜ பெருமாள்

அம்மனின் பெயர் : பூமிநீளா (உற்சவர்: ஸ்ரீதேவி,பூதேவி)

தல விருட்சம்   : வேம்பத்தூர்

கோவில் திறக்கும் நேரம் :   காலை 6 மணி முதல் 11 மணி வரை,
                              மாலை  5 மணி முதல் இரவு 8  மணி வரை.

முகவரி : அருள்மிகு சுந்தரராஜ பெருமாள் திருக்கோவில் , வேம்பத்தூர் - 630 565. சிவகங்கை மாவட்டம்.Ph:04575- 236 284, 236 337 97903 25083கோவில் சிறப்பு :

* 1000-2000 வருடங்களுக்கு முன் பழமையானது.

* ஊரின் எல்லையில் 2008 விநாயகர் தனி சன்னதியில் அருள்பாலிக்கிறார். கோயில் பிரகாரத்தில் லட்சுமி நாராயணன், லட்சுமி நரசிம்மர், லட்சுமி ஹயக்கிரீவர், லட்சுமி பூவராகர் அருள்பாலிப்பது மிகவும் சிறப்பு.இப்படி நால்வரும் ஒரே இடத்தில் அருள்பாலிப்பதால் இங்கு வந்து வழிபடுபவர்களது பணக்கஷ்டம் நீங்குவதுடன், கல்வி கேள்விகளில் சிறந்து விளங்கி பண்டிதராகவும் விளங்குகிறார்கள்கோயிலுக்குள் பிள்ளையார், கருப்பண்ண சவாமி, கருடாழ்வார், ஆஞ்சநேயர், ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக சுந்தரராஜபெருமாளின் பத்து அவதார மூர்த்திகளும் தனித்தனியே அருள்பாலிக் கிறார்கள்.

* மிகவும் பழங்காலத்து பெருமாளான இவரை வணங்கினால் நாவன்மையும், கவிப்புலமையும் கிடைக்கும்.குழந்தைகளை பள்ளிகளில் சேர்ப்பதற்கு முன்பும், வேதபாட சாலைகளில் சேர்ப்பதற்கு முன்பும், உயர்படிப்பு, மேல்படிப்பு செல்வதற்கு முன்பும் படிப்பிற்கு தகுந்த வேலை கிடைக்கவும் இத்தல பெருமாளை வழிபட்டு செல்வது நல்லது.

முந்தைய கோவில்
அடுத்த கோவில்

0 Comments: