வியாழன், 28 ஜூலை, 2016

அருள்மிகு திருவல்லீஸ்வரர் திருக்கோவில்

கோவில் பெயர்   : அருள்மிகு திருவல்லீஸ்வரர்  திருக்கோவில்

சிவனின் பெயர்   : திருவல்லீஸ்வரர், திருவலிதமுடையநாயனார் 

அம்மனின் பெயர் :  ஜெகதாம்பிகை

தல விருட்சம்     :   பாதிரி, கொன்றை

கோவில் திறக்கும் : காலை 6.30மணி முதல் 12மணி வரை, மாலை4.30 மணி முதல் 8.30 இரவு மணி வரை திறந்திருக்கும்.

முகவரி : அருள்மிகு திருவல்லீஸ்வரர் திருக்கோவில் பாடி, திருவலிதாயம், சென்னை-600 050.Ph: 0442654 0706

கோவில் சிறப்பு : 

* 1000-2000 வருடங்களுக்கு முன் பழமையானது.

* இது 254 வது தேவாரத்தலம் ஆகும்.

* மூலவர் சுயம்பு மூர்த்தி. இவருக்கு மேல் உள்ள விமானம் கஜபிருஷ்ட (யானையின் பின்புறம்) அமைப்புடையது.

* சுவாமியை வணங்கிட திருமணத்தடை, நோய்கள் நீங்கும், தெட்சிணாமூர்த்திக்கு மஞ்சள் வஸ்திரம் சாத்தி வணங்கிட ஞானம் கிடைக்கும் என்பது நம்பிக்கை. பவுர்ணமியில் சுவாமியை வழிபட்டால் நற்பேறு கிடைக்கும்.
முந்தைய கோவில்
அடுத்த கோவில்

0 Comments: