வியாழன், 28 ஜூலை, 2016

அருள்மிகு வாசீஸ்வரர் திருக்கோவில்

கோவில் பெயர்   : அருள்மிகு   வாசீஸ்வரர்  திருக்கோவில்

சிவனின் பெயர்   :  வாசீஸ்வரர்

அம்மனின் பெயர் :  தங்காதலி

தல விருட்சம்     :   மூங்கில்

கோவில் திறக்கும் : காலை 6 மணி முதல் 12 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்

முகவரி : அருள்மிகு வாசீஸ்வர சுவாமி திருக்கோயில், 
திருப்பாசூர் - 631 203, திருவள்ளூர் மாவட்டம்.Ph: 98944 - 86890

கோவில் சிறப்பு : 

* 1000-2000 வருடங்களுக்கு முன் பழமையானது.

* இது 249 வது தேவாரத்தலம் ஆகும். 

கருவறையில் சிவன் சுயம்பு லிங்கமாக சதுர வடிவ பீடத்தில் காட்சி தருகிறார். இவர், தலையில் வெட்டுப்பட்ட தடத்துடன் தன் உடலில் மேல் பகுதி மட்டும் இடப்புறத்தில் சற்று நகர்ந்தபடியான கோலத்தில் இருப்பது சிறப்பு. காயம்பட்ட லிங்கம் என்பதால் இவரை கையால் தொட்டு பூஜைகள் செய்யப்படுவதில்லை. அர்த்த மண்டபத்தில் ஆதிசங்கரர் பிரதிஷ்டை செய்த ஸ்ரீசக்கரம் இருக்கிறது. மூங்கில் வனத்தின் அடியில் தோன்றிய சிவன் என்பதால் இவருக்கு பாசுரநாதர் என்றொரு பெயரும் உண்டு. பாசு என்றால் மூங்கில் என்று பொருள்.சிவன் இங்கு லிங்க வடிவில், பெருமாள் வினை தீர்த்த ஈஸ்வரன் என்ற பெயரில் தனியாகவும் இருக்கிறார்.

* தடைபட்ட திருமணங்கள் நடக்கவும், தோஷங்கள் நீங்கவும் பிரார்த்திக்கின்றனர்.
முந்தைய கோவில்
அடுத்த கோவில்

0 Comments: