செவ்வாய், 12 ஜூலை, 2016

அருள்மிகு வீரட்டேஸ்வரர் திருக்கோவில்


கோவில் பெயர்   : அருள்மிகு  வீரட்டேஸ்வரர்  திருக்கோவில்

சிவனின் பெயர்   :  வீரட்டேஸ்வரர் 

அம்மனின் பெயர் :  பெரியநாயகி , சிவானந்த வல்லி

தல விருட்சம்     :   சரக்கொன்றை

கோவில் திறக்கும் நேரம் : காலை 6 மணி முதல் 11 மணி வரை, 
மாலை 5 மணி 8 முதல் இரவு மணி வரை.    

முகவரி : அருள்மிகு வீரட்டேசுவரர் திருக்கோவில், திருக்கோவிலூர்-605 757, விழுப்புரம் மாவட்டம்.Ph:093456 60711

கோவில் சிறப்பு :

* 1000-2000 வருடங்களுக்கு முன் பழமையானது.

* இது 222 வது தேவாரத்தலம் ஆகும்.

* இங்கு சிவன் இறைவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.

* இத்தலத்து விநாயகப்பெருமானை குறித்து அவ்வையார் சீதக் களப எனத் தொடங்கும் விநாயகர் அகவல் பாடியுள்ளார். 

* அந்தகாசூரனை  சிவபெருமான் சம்காரம் செய்த திருத்தலம் இது. அட்ட வீரட்டத் தலங்களில் மிகவும் தொன்மையனாதும் வரலாற்றுச் சிறப்பு பெற்றதுமான 2 வது வீரட்டான திருத்தலம் இது.

* சுவாமி மூலஸ்தானத்தில்பைரவ சொரூபமாக உள்ளாராம். எனவே பில்லி சூன்யம்,வைப்பு போன்ற தோசங்களை இவர் நிவர்த்தி செய்வதாக ஐதீகம். வாஸ்து சாந்தி (வீடு கட்டுதல்) எனப்படும் ஐதீகம் தோன்றியதற்கு காரணமான தலம் இது.

* சுக்கிரன் சாப விமோசனம் பெற்ற தலம் இது.
* அம்பாள் திரிபுர பைரவி உற்பத்தி தலம் இது. 
* சப்த மாதாக்கள் உற்பத்தியான தலம் இது.

* இங்குள்ள ஈசனை வழிபடுவோர்க்கு மனநிம்மதி கிடைக்கும். பூர்வஜென்ம பாவங்கள் விலகும்.(வர்க்க தோசம்) புத்திர தோசங்கள் விலகும். பாவ தோசங்களும் விலகும்.காரியத் தடைகள் நீங்கும். வீடுகட்டுவதற்கான தடைகள் இத்தலத்தில் வழிபட்டால் நீங்கும்.(வாஸ்து ஐதீகம் தோன்றியதே இத்தலத்தில்தான்). சுக்கிரன் சாபவிமோசனம் பெற்ற தலம் ஆதலால் திருமணத்தடை விலகும்.
*  64 பைரவர்கள் 64 பைரவிகள் உற்பத்தியான தலம் இது. 
முந்தைய கோவில்
அடுத்த கோவில்

0 Comments: