ஞாயிறு, 10 ஜூலை, 2016

அருள்மிகு அர்த்தநாரீஸ்வரர் திருக்கோவில்,திருச்செங்கோடு


கோவில் பெயர்   : அருள்மிகு அர்த்தநாரீஸ்வரர்  திருக்கோவில்

சிவனின் பெயர்   : அர்த்தநாரீஸ்வரர்

அம்மனின் பெயர் :  பாகம்பிரியாள்

தல விருட்சம்     : இலுப்பை

கோவில் திறக்கும் நேரம் :காலை 6 மணி முதல்  மாலை  6 மணி வரை. 

முகவரி : அருள்மிகு அர்த்தநாரீஸ்வரர் திருக்கோவில், திருச்செங்கோடு- 637211.  நாமக்கல் மாவட்டம். Ph:04288-255 925, 93642 29181

கோவில் சிறப்பு : 

* 1000-2000 வருடங்களுக்கு முன் பழமையானது.

* இது 208 வது தேவாரத்தலம் ஆகும்.

* சிவனும் சக்தியும் இணைந்த அர்த்தநாரீஸ்வரர் கோயில்கள் திருச்செங்கோடு மற்றும் வாசுதேவநல்லூர் (திருநெல்வேலி) ஆகிய இடங்களில் உள்ளன. சுவாமியின் பாதத்தின் கீழ் தேவதீர்த்தம் உள்ளது. 

* இத்தலம் 1901 அடி உயரம் கொண்டது. இந்த மலையில் ஏற, 1200 படிகள் உள்ளன. படி ஏற முடியாதவர்கள் கோயில் வரை வாகனத்திலும் செல்லலாம்.

* கணவன் மனைவி ஒற்றுமைக்காகவும், நாகதோஷம், ராகு-தோஷம், காள சர்ப்ப தோஷம், களத்திர தோஷத்தால் பாதிக்கப்பட்டவர்கள் இங்கு வழிபாடு செய்கின்றனர்.
முந்தைய கோவில்
அடுத்த கோவில்

0 Comments: