கோவில் பெயர் : அருள்மிகு ஆரண்யேஸ்வரர் திருக்கோவில்
சிவனின் பெயர் : ஆரண்யேஸ்வரர் (ஆரண்யசுந்தரர்)
அம்மனின் பெயர் : அகிலாண்டேஸ்வரி
தல விருட்சம் : பன்னீர் மரம்
கோவில் திறக்கும் நேரம் : காலை 7 மணி முதல் 11. மணி வரை ,
மாலை 6 மணி முதல் இரவு 7.30 மணி வரை
முகவரி : அருள்மிகு ஆரண்யேஸ்வரர் திருக்கோயில், கீழைத்திருக்காட்டுப்பள்ளி, திருவெண்காடு அஞ்சல் - 609 114 சீர்காழி வட்டம், நாகப்பட்டினம் மாவட்டம். Ph:04364 - 256 273, 94439 85770, 98425 93244
கோவில் சிறப்பு :
* 1000-2000 வருடங்களுக்கு முன் பழமையானது.
*இது 12 வது தேவாரத்தலம் ஆகும்.
* இறைவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.
* மூலவரின் மேல் உள்ள விமானம் துவைதளம் எனப்படும். பிரகாரத்தில் "தசலிங்கம்' சன்னதி இருக்கிறது. இந்த சன்னதியில் ஏழு லிங்கங்கள் இருக்கிறது. இதில் ஒரே லிங்கத்தில் இரண்டு பாணங்கள் இருப்பது வித்தியாசமான அமைபு. இந்த அமைப்பை குறிப்பிட்டு சம்பந்தர், ""தன்னருகே தசலிங்கம் கொண்ட உடையர்'' என்று பாடியிருக்கிறார்.
* தெரியாமல் செய்த பாவம் நீங்க, இழந்த பதவி கிடைக்க இங்கு வேண்டிக்கொள்ளலாம்.
* இத்தலத்தில் இருந்து 1 கி.மீ., தூரத்தில் நவக்கிரக தலங்களில் புதன் தலமான திருவெண்காடு இருக்கிறது.
0 Comments: