வியாழன், 27 அக்டோபர், 2016

அருள்மிகு உத்தண்ட வேலாயுத சுவாமி திருக்கோவில்,கோயம்புத்தூர்


கோவில் பெயர் :  அருள்மிகு உத்தண்ட வேலாயுத சுவாமி திருக்கோவில் 

முருகன் பெயர்  : உத்தண்ட வேலாயுத சுவாமி 

கோவில் திறக்கும் நேரம் :   காலை 9 மணி 12 முதல் மணி வரை, 
மாலை 5 மணி முதல் இரவு 6 மணி வரை.

முகவரி : அருள்மிகு உத்தண்ட வேலாயுத சுவாமி,திருக்கோவில்
ஊதியூர், கோயம்புத்தூர். Ph:04257 249977, 97880 10161  

கோவில் சிறப்பு : 

* மலையின் வடபுறம், கொங்கண சித்தர் பொன் ஊதியத்திற்கு அடையாளமாக மண் குழாய்கள் பல இன்றும் காணப்படுவது சிறப்பு. ராம லக்ஷ்மணனைக்காக அனுமன் சஞ்சீவி மலையை எடுத்துவந்த போது, அதன் ஒரு பகுதி கொங்குநாட்டில் விழுந்தது. அந்த மலையை சஞ்சீவி மலை என்றும் ஊதியூர் மலை என்றும் அழைக்கப்படுகிறது. மலையில் உத்தண்ட வேலாயுத சுவாமி எழுந்தருளியுள்ளார்.

 மலையின் இடைப்பகுதியில் முருகன் கோவில் உள்ளது. மலைப்பகுதியின் தொடக்கத்தில் மிகவும் அழகிய மயில் மண்டபம் உள்ளது. அடுத்து இருப்பது பாதவிநாயகர் கோவில், வழியில் வடபுறம் இடும்பன் கோயிலும், தென்புறம் அனுமந்தராயன் கோயிலும் உள்ளன. கடந்து மேலே சென்றால் நுழைவாயிலோடு கூடிய ஒரு மண்டபம் இருக்கிறது. அதைக் குறட்டு வாசல் என்பர்.

 சித்தர்கள் வாழ்ந்த இம்மலைமீது விளங்கும் இறைவனை தரிசித்தவர், வாழ்வில் தரித்ததிரங்கள் நீங்கி வளம் பெறுவர் என்பது ஐதீகம். கொங்கணச் சித்தர் வாழ்வுடனும் வரலாற்றுடனும் தொடர்புப்படுத்திக் கூறப்படுவதால், ஊதியூர் மலை, கொங்கணகிரி எனவும் அழைக்கப்படுகிறது.

பிரார்த்தனை:

பலருக்கும் இத்தலத்து வேலாயுத சுவாமி குல தெய்வமாகவும், இஷ்டதெய்வமாகவும் விளங்குகிறார். இப்பகுதியைச் சேர்ந்தவர்கள் எந்த சுப காரியங்களை செய்வதென்றாலும், வேலாயுத சுவாமியின் உத்தரவு பெற்றே மேற்கொள்கின்றனர். அப்படிச் செய்வதால், தாங்கள் செய்யும் காரியங்களில் எந்தத் தடையும் ஏற்படாமல் வெற்றியே கிட்டும் என்பது நம்பிக்கை.  

நேர்த்திக்கடன்:

திருமணத்தடை, குழந்தைப்பேறின்மை உள்பட அனைத்து பிரச்னைகளும் அகல ஒன்பது செவ்வாய்க்கிழமைகள் வேலாயுதசுவாமிக்கு அபிஷேக, ஆராதனைகள் செய்து, நெய்தீபம் ஏற்றி வழிபட்டால், நற்பலன் விரைவாக கிட்டுகிறது. என்று மனப்பூர்வமாக நம்புகின்றனர் பக்தர்கள்.  
முந்தைய கோவில்
அடுத்த கோவில்

0 Comments: