புதன், 4 ஜனவரி, 2017

அருள்மிகு கனகாசல குமரன் திருக்கோவில்

கோவில் பெயர் : அருள்மிகு கனகாசல குமரன் திருக்கோவில்

முருகன் பெயர்  : கனகாசல குமரன்

கோவில் திறக்கும் நேரம் :   காலை 5 மணி முதல் 8 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

முகவரி :  அருள்மிகு கனகாசல குமரன் திருக்கோவில்,
எழுமாத்தூர், ஈரோடு

கோவில் சிறப்பு : 

* பிரார்த்தனை பக்தர்கள் இங்குள்ள கனகசாலக் குமரனை வணங்கினால், நல்ல வாழ்க்கைத் துணை அமையும்; வீட்டில் பொன்னும் பொருளும் சேரும் என்பது ஐதீகம்! நேர்த்திக்கடன்: வேண்டுதல்கள் நிறைவேறிய பக்தர்கள் தொடர்ந்து ஐந்து செவ்வாய்க்கிழமைகள் இங்குள்ள முருகப்பெருமானுக்கு விளக்கேற்றி தங்களது நேர்த்திக்கடனைச் செலுத்துகின்றனர். தலபெருமை: ஏழு கன்னிமார்களுடன் இலந்தை மரத்தடியில் வீற்றிருக்கும் விநாயகப் பெருமானும் அற்புதத் தரிசனம் தருகிறார். இங்கு வந்து அண்ணன் விநாயகரை வணங்கித் தொழுதுவிட்டு, கனகசாலக் குமரனைக் கண்ணாரத் தரிசனம் செய்து மனதாரப் பிரார்த்தனை செய்தால், நல்ல வாழ்க்கைத் துணை அமையும்; வீட்டில் பொன்னும் பொருளும் சேரும் என்பது ஐதீகம்! தொடர்ந்து ஐந்து செவ்வாய்க்கிழமைகள் இங்கு வந்து முருகப்பெருமானுக்கு விளக்கேற்றி வழிபட்டால், பிள்ளை பாக்கியம் கிடைக்கப் பெறலாம் என்கின்றனர் பக்தர்கள். செவ்வாய்க்கிழமைகளில் இங்கு கோ பூஜை சிறப்புற நடைபெறுகிறது. அப்போது கோயிலைச் சேர்ந்த கன்றுக்குட்டி தானாகவே மலையேறிச் சென்று, பூஜை செய்யும் காட்சியைக் கண்டு சிலிர்த்துப் போகிறார்கள்! பக்தர்கள். இது காட்டுகிறது.

* ஏழு கன்னிமார்களுடன் இலந்தை மரத்தடியில் வீற்றிருக்கும் விநாயகப் பெருமானும் அற்புதத் தரிசனம் தருகிறார். இங்கு வந்து அண்ணன் விநாயகரை வணங்கித் தொழுதுவிட்டு, கனகசாலக் குமரனைக் கண்ணாரத் தரிசனம் செய்து மனதாரப் பிரார்த்தனை செய்தால், நல்ல வாழ்க்கைத் துணை அமையும்; வீட்டில் பொன்னும் பொருளும் சேரும் என்பது ஐதீகம்! தொடர்ந்து ஐந்து செவ்வாய்க்கிழமைகள் இங்கு வந்து முருகப்பெருமானுக்கு விளக்கேற்றி வழிபட்டால், பிள்ளை பாக்கியம் கிடைக்கப் பெறலாம் என்கின்றனர் பக்தர்கள். செவ்வாய்க்கிழமைகளில் இங்கு கோ பூஜை சிறப்புற நடைபெறுகிறது. அப்போது கோயிலைச் சேர்ந்த கன்றுக்குட்டி தானாகவே மலையேறிச் சென்று, பூஜை செய்யும் காட்சியைக் கண்டு சிலிர்த்துப் போகிறார்கள்! பக்தர்கள்.

செவ்வாய், 3 ஜனவரி, 2017

அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில், பச்சைமலை.


கோவில் பெயர்: அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில், பச்சைமலை.

முருகன் பெயர்   : சுப்பிரமணிய சுவாமி

கோவில் திறக்கும் நேரம் :   காலை 6 மணி முதல் 1 மணி வரை, 
மாலை 4.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்.

முகவரி : அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில், 
பச்சைமலை,கோபிசெட்டிப்பாளையம் - 638476,Ph :04285 222125

கோவில் சிறப்பு : 
* நாம் பலரும் நினைப்பது போல பச்சைமலை என்று இம்மலை பெயர் பெற காரணம் மரங்களோ, செடிகளோ அல்ல. பழைய படங்களை புரட்டினால் பச்சைமலையில் அவ்வளவாக மரங்கள் இல்லாமல் பாறைகளும் கற்களுமாக இருப்பதையே காண முடியும். இங்கு "பச்சை" என்பது நீரை குறிக்கிறது. இங்குள்ள மூலவருக்கு நேர் கீழாக ஒரு நீரூற்று இருப்பதாக நம்பப்படுகிறது. இது சமீப காலத்தில் நிரூபானம் ஆனது ஒரு சுவையான நிகழ்ச்சியின் மூலம் அறியலாம். வருடம் 2000 க்கு முன்பு பச்சைமலைக்கு நீர் மலை அடிவாரத்தில் இருந்து தான் கொண்டு செல்லப்படும். அப்பொழுது ஏற்பட்ட வறட்சியில் கிணறுகள் வற்றிவிட்டன. அப்பொழுது மலைக்கு மேலே ஆழ்குழாய் கிணறு அமைத்தல் பற்றிய திட்டம் உருவானது. மலை அடிவாரத்தில் தண்ணீர் இல்லாத சமயம் மலைக்கு மேலே தண்ணீர் இருக்க முடியாது என்பதால், மிகுந்த சந்தேகத்தோடு தான் ஆழ்குழாய் தோண்டப்பட்டது. அன்று சிறு ஆழத்திலேயே மிகவும் வேகமாகவும், உயரமாகவும் நீர் வெளியேறியதை அருகிலிருந்தோர் இன்றும் பரவசத்தோடு நினைவு கூறுகின்றனர். இதனால், பச்சைமலையில் பயன்படுத்தும் நீர் அனைத்தையுமே நாம் தீர்த்தமாக கொள்ளலாம்.

* பிரார்த்தனை வேண்டுவோருக்கு வேண்டுவன எல்லாம் தருவதால் இங்கு ஏராளமான பக்தர்கள் வந்து பிரார்த்திக்கின்றன. நேர்த்திக்கடன்: திருமணமாகி நீண்ட நாட்கள் குழந்தைப்பேறு கிட்டாமல் இருந்தவர்கள் பச்சை மலையில் 7 நாட்கள் சஷ்டி விரதம் மேற்கொண்டு குழந்தை பெற்றோர் ஏராளம். 7ம் நாள் திருக்கல்யாண உற்சவம் முடிந்து தயிர்- தண்டு பிரசாதத்துடன் விரதம் நிறைவடைகிறது. திருமண தடைகள் நீங்க 6 செவ்வாய் கிழமைகளில் கல்யாண சுப்ரமணியருக்கு நெய் தீபம் இட்டு ஆராதனைகள் செய்தால் நிச்சயம் திருமண தடைகள் நீங்கி திருமணம் நடக்கிறது. தலபெருமை: மூலஸ்தானத்தில் இளங்குமரனாக ஞானப்பழமாக மேற்குநோக்கி சொர்ண பந்த பீடத்தில் நின்ற கோலத்தில் உள்ளார். வலக்கையில் தண்டமும் இடக்கரத்தை இடுப்பில் ஊன்றியும் சக்தி வேலுடனும் சேவற்கொடியுடனும் கலியுக தெய்வமாக சுப்பிரமணிய சுவாமி என்ற திருநாமத்தில் விளங்குகின்றார். அர்த்த மண்டபத்தின் ஒரு புறம் ஆறுமுகமும் பன்னிரு திருக்கரங்களுடன் வள்ளி தெய்வயானை சமேதரராய் அருள்கின்றார். மறுபுறம் கல்யாண சுப்ரமணியராய் வள்ளி தெய்வயானையுடன் மணக்கோலத்தில் வீற்றிருக்கின்றார். இவை இரண்டும் உற்சவ மூர்த்திகள் ஆகும். ஒரு சமயம் பங்குனி உத்திர திருவிழாவின் போது அர்ச்சனையுடன் ஹோமமும் செய்தனர். அப்போது வேதங்களை ஓதிக்கொண்டிருந்த அர்ச்சகர் தீடிரென மயங்கி விழுந்தார். மயங்கிய விபரத்தைக் கேட்டபோது கருவறையில் மந்திர சக்தி உக்கிரமாக இருப்பதால் பாலாபிஷேகம் செய்யுமாறு கூறினார். அன்று தொட்டு இன்று வரை இதைக் கடைப்பிடித்து வருகின்றனர்.கடம்பனின் இஷ்ட மலரைக் கொண்ட கடம்பத்தை தல விருட்சமாகவும், தீர்த்தமாக சரவண தீர்த்ததையும் கொண்டு விளங்குகிறது இத்தலம். (தற்போது சுனை வற்றிவிட்டது) பழநிமலையில் மூலவருக்கு அமைந்துள்ளதைப் போன்றே சொர்ண பந்தனம் செய்விக்கப்பட்டுள்ளது. பழநி மலையில் நடப்பதைப் போன்றே இங்கும் காலை, மாலை நேரங்களில் இராக்கால மகா அபிஷேகம் நடைபெறுகின்றன. திருச்செந்தூர் முருகன் கோயிலில் இருப்பது போல இரண்டு மயில் வாகனங்கள் அமைந்துள்ளன. அக்னி நட்சத்திரத்தின் போது மரகதீஸ்வரருக்கு தாராபிஷேகமும், 108 லிட்டர் பாலாபிஷேகமும் செய்யப்படுகிறது. சுமார் 3 மணி நேரம் நீடிக்கும் ருத்ராபிஷேகம் 11 முறை ஜெபிக்கப்படுகிறது. இத்தலத்தில் 7 கால பூஜைகள் நடைபெறுகின்றன.


செவ்வாய், 29 நவம்பர், 2016

அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோவில்,சென்னிமலை

கோவில் பெயர் : அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோவில்,சென்னிமலை

முருகன் பெயர்  :சுப்ரமணியசுவாமி ( தண்டாயுதபாணி), ஸ்ரீ சிரகிரிவேலவன்

கோவில் திறக்கும் நேரம் :   காலை 6 மணி முதல் 8.15  இரவு மணி வரை.

முகவரி : அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோவில்,
சென்னிமலை
பெருந்துறை தாலுகா,
ஈரோடு மாவட்டம்,
தொலைபேசி: (04294) 250223, 292263, 292595.
மின்னஞ்சல்: chennkovil@gmail.com

கோவில் சிறப்பு :

பிரார்த்தனை கல்யாணத்தடை நீங்குகிறது. குழந்தை பாக்கியம் கைகூடுகிறது. தவிர செவ்வாய் தோஷம் நீங்குகிறது. இத்தலம் பிரார்த்தனைத் தலங்களில் முக்கியமானது. நோய் நீக்கம், துன்ப நீக்கம், ஆயுள் பலம், கல்வி, அறிவு, செல்வம், விவசாயம் செழிப்பு ஆகியவற்றைப்பெற இத்தலத்தில் முருகனிடம் வேண்டுகிறார்கள். இயற்கை மூலிகை மரங்கள் செடி கொடிகள் நிறைந்த மலையாக இருப்பதால் இங்கு வரும் ரத்தகொதிப்பு ஆஸ்துமா நெஞ்சுவலி நோய்கள் உடையவர்கள் குணமாகிறார்கள். இது இத்தலத்துக்கு அடிக்கடி வந்து போகும் பக்தர்கள் அனுபவப்பூர்வமாக கண்ட உண்மை என தெரிவிக்கிறார்கள். நேர்த்திக்கடன்: முருகனுக்கு பால், தயிர் அபிஷேகம் செய்யப்படுகிறது. முருகனுக்கு அபிஷேகம் செய்யும் தயிர் புளிப்பதில்லை. தவிர காவடிஎடுத்தல், முடிக்காணிக்கை முதலியன, கிருத்திகை அன்னதானம், காவடி எடுத்தல், பால்குடம் எடுத்தல், முடி இறக்கி காது குத்தல் சஷ்டி விரதம் இருத்தல். தவிர சண்முகார்ச்சனை, முருக வேள்வி ஆகியவை செய்கிறார்கள். கார்த்திகை விரதம் இருத்தல். ஏழைகளுக்கு அன்னதானம் செய்தல், திருப்பணிக்கு பொருளுதவி செய்தல் ஆகியவை இத்தலத்துக்கு வருபவர்கள் முருகனுக்காக செய்யலாம். தலபெருமை: மாமாங்கத் தீர்த்தம் : 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை வறட்சியான கோடை காலத்தில் சிறிதேனும்கூட மழையில்லாத கொடூரமான நேரத்தில் மலைக் கோயிலுக்கு தென்புறம் அமைந்துள்ள தீர்த்த விநாயகர் முன்பு திடீரென பொங்கி வழிந்தோடும் மாமாங்கத் தீர்த்தமானது அதிசயம் நிறைந்த தெய்வீகச் சிறப்பாக அமைந்து விடுகிறது. இது ஒர் மலைக்கோயில் இதன் உயரம் 1740 அடி, படிகள் 1320. அதிசயத்திலும் அதிசயமாக இரட்டை மாட்டு வண்டி 1320 திருப்படிகள் வழியே தங்கு தடையின்றி ஏராளமான செங்குத்தான வளைவுகள் உள்ள பாதை வழியே மலையேறிய அதிசயம் நடந்தது. சிறப்பு மிகுந்த சஷ்டி விரதம் : குழந்தை வரம் வேண்டுவோர் முறையாக சஷ்டி விரதம் இருந்து முருகப் பெருமானை வழிபட்டால் குழந்தை வரம் கிடைக்கும். சிரசுப் பூ உத்திரவு கேட்டல்: திருமணம், வரன்கள், விவசாயம், கிணறுவெட்டுதல், புதிய வியாபாரம் தொடங்கல், வியாதிகள் ஆகியவை குறித்து முடிவு செய்ய ஆண்டவர் முன்னால் அர்ச்சனை செய்து சிரசுப் பூ உத்திரவு கேட்டு நல்ல உத்திரவு கிடைத்தபின்பு காரியத்தை தொடங்குகிறார்கள். சிரசுப்பூ உத்திரவு நல்லபடியாக கிடைக்காவிட்டால் குறிப்பிட்ட செயல்களை பக்தர்கள் தொடங்குவதில்லை. முருகன் நடுநாயகமாக, மூர்த்தியாக, செவ்வாய் கிரகமாக அமைந்து மூலவரைச் சுற்றி எட்டு நவகிரகங்கள் உள்ளன. மூலவரை வழிபட்டாலே நவகிரகங்களை வழிபட்ட பலன் உண்டு. கந்த சஷ்டி கவசம் அரங்கேற்றம் நடந்த தலம். வள்ளி, தெய்வானை சென்னிமலை ஆண்டவரை திருமணம் செய்ய அமிர்த வல்லி, சுந்தர வல்லி என்ற பெயருடன் தவம் செய்து தனிப் பெருங்கோயிலாக பக்தர்களுக்கு காட்சி தருவது சிறப்பு. இவை ஒரே கல்லில் அமைக்கப்பட்டுள்ளது. அருணகிரிநாதருக்கு படிக்காசு வழங்கிய தலம். முருகன் தன்னைத்தானே பூஜித்த தலம். இடும்பனுக்கு பொதிகை மலை செல்ல வழி காட்டிய தலம். அக்னி ஜாத மூர்த்தி (இரண்டு தலைகள் உள்ள முருகன்) என்ற சுப்ரமணியர் வேறு எங்கும் இல்லை. இவர் மிகவும் விசேஷமானவர். கோயிலுக்கு பின்புறம் பிண்ணாக்கு சித்தர் குகை உள்ளது. தமிழகத்தில் வேறு எந்த தலத்திலும் காணமுடியாத வேங்கை மரத் தேர் இத்தலத்தில் உள்ளது. அடர்ந்த மரங்கள் அடர்ந்த மலை மீது அமைந்துள்ள மிக அழகான அமைதியான சிறப்பு வாய்ந்த கோயில். கந்த சஷ்டி அருங்கேறிய ஸ்தலம்: உலகில் உள்ள முருக பக்தர்கள், தினமும் மனமுருகி பாராயணம் செய்யும், ஸ்ரீகந்தர் சஷ்டி கவசம்' இயற்றிய ஸ்ரீபாலன்தேவராய சுவாமிகள், காங்கேயம் நகரின் அருகில் உள்ள மடவிளாகத்தை சேர்ந்தவர். இவர், மைசூர் தேவராசஉடையாரின் காரியஸ்தரில் ஒருவராவார். இவர் முருக பக்தர். ஐப்பசி மாதம், கந்த சஷ்டி அன்று, வேற்று மதத்தவர்களிடம் அனல்வாதம் (தான் எழுதிய நுõலை சான்றோர்கள் முன், நெருப்பிலிட்டு, தீயில் கருகாமல் திரும்ப எடுத்து அரங்கேற்றுவது), புனல்வாதம் (கரைபுரண்டு ஓடும் ஆற்று வெள்ளத்தில், தான் எழுதிய நுõலை இட்டு, நீரில் எதிர்கொண்டு செல்லும் சுவடிகளை எடுத்து அரங்கேற்றுவது) செய்து, கந்த சஷ்டி கவசத்தை அரங்கேற்றம் செய்ய முருகனை வேண்டினார். அதற்கு உரிய ஆலயமாக சென்னிமலையை, முருகப்பெருமானின் அருளாணையால் உணர்ந்து, இங்கு கந்த சஷ்டி கவசத்தை சிரகிரி வேலவன் சீக்கிரம் வருக' என இத்தலத்து பெருமானை அழைத்து, அரங்கேற்றம் செய்து, பெருமைபடைத்தார். சஷ்டி விரத மகிகை: கந்தர் சஷ்டி கவசம் அரங்கேற்றம் செய்யப்பட்ட இத்தலத்தில், பிரதி மாதம் வளர்பிறை சஷ்டி திருநாளிலும், ஐப்பசி மாதம் கந்தர் சஷ்டி திருவிழா, ஆறாம் நாளில் எண்ணற்ற பக்தர்கள், சந்தான பாக்கியம் வேண்டி விரமிருப்பது தொன்று தொட்ட நோன்பாகும். இதை முன்னோர்கள், சஷ்டியில் இருந்தால், அகப்பையில் வரும்' எனக்கூறுவர். குழந்தை வரம் வேண்டி முறையாக, சஷ்டி விரதம் கடைபிடிப்போருக்கு, சென்னிமலை ஆண்டவர் குழந்தைப்பேறு அருள்வது கண்கூடானது. குழந்தை வரம் வேண்டுவோரும், வரத்தின் பலன் கிடைத்த பின்னரும், குழந்தைகளோடு வளர்பிறை சஷ்டித்திருநாளில், ஆண்டவரை தரிசித்து செல்வது இன்னும் தொடர்கிறது. திருமணம் செய்து கொள்ளும் தம்பதியர், சந்தான பாக்கியம் வேண்டி, பச்சரிசி மாவிடித்து, தீபம் ஏற்றி, வழிபடுவதும், சன்னதி முன் தாலி சரடு கட்டிக்கொள்வதும் வழக்கம். இரட்டை மாட்டு வண்டி மலையேறிய அதிசயம்: ஈரோடு மாவட்டத்தில், குன்று போன்ற உயரத்தில் சென்னிமலை அமைந்துள்ளது. அங்கிருந்து உயரமான மலையின் மீது, முருகப்பெருமான் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலுக்கு மலைப்பாதையாக வாகனங்கள் செல்ல, ரோடு வசதி உள்ளது. தேவஸ்தானம் மூலம், பக்தர்களை அழைத்து செல்ல பஸ் வசதி உள்ளது. பக்தர்களே, அவர்களது வாகனங்களில் சென்று வரவும் அனுமதி உண்டு. அத்துடன், மலைப்பாதையாக, 1,320 திருப்படிகள் ஏறி செல்ல படிகள், நிழற்கூரைகள் உள்ளன. இவ்வழியாகவே அதிக பக்தர்கள் சென்று, தரிசித்து வருகின்றனர். இந்நிலையில், கடந்த, 1984, ஃபிப்ரவரி, 12ம் தேதி உலக அதிசயமாக, இரட்டை மாட்டு வண்டி, படி வழியாக மலையேறிய அதிசயம் நிகழ்ந்தது. முதல் நாள் இரவே மலை மற்றும் நகரம் முழுவதும், பல லட்சம் பேர் திரண்டனர். அதிகாலையில், இரட்டை மாட்டு வண்டி, தடையின்றி, படிகள் வழியாக ஏறிச்சென்ற நிகழ்வு, இறைவனின் திருவிளையாடலாக கருதப்படுகிறது. எனவே, இத்தலம், செவ்வாய் பரிகார ஸ்தலமாக கருதப்படுகிறது. ஏற்கனவே, நாகை மாவட்டம் வைத்தீஸ்வரன் கோவிலிலும், முருகப்பெருமான் செவ்வாய் அம்சமாகவே அருள்பாலிப்பதால், செவ்வாய் பரிகார ஸ்தலமாக விளங்குகிறது. அதுபோல, சென்னிமலையும், பரிகார ஸ்தல சிறப்பு பெற்றுள்ளது. ஜாதகத்தில் செவ்வாய் தோஷம் உடையவர்கள், இத்தலத்தில் முருகனுக்கு நெய்தீபம் ஏற்றி, வழிபட்டால், தோஷத்துக்கான காரணிகள் நீங்கி, சுபிட்ஷம் பெருவர். முருகன்பெருமான் நடத்தும் சூரசம்ஹார நிகழ்வை, சிக்கலில் வேல் வாங்கி, செந்துõரில் சம்ஹாரம்' என்பவர். நாகை மாவட்டம் சிக்கல் கோவிலில், சூரசம்ஹாரத்துக்கு முன்பாக, பார்வதி தேவியிடம் இருந்து முருகப்பெருமான் வேல் வாங்கும் நிகழ்ச்சி நடக்கும். இதைத்தொடர்ந்து, திருச்செந்துõரில் சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடக்கும். இதனால், சிக்கல் மற்றும் திருச்செந்துõருக்கு, சஷ்டியின்போது ஏராளமான பக்தர்கள் குவிந்து, முருகனை தரிசனம் செய்வர். குரு ஸ்தலமாக கருதப்படும் திருச்செந்துõரில் பக்தர்கள் தரிசனம் செய்து, முருகன் மற்றும் குரு பரிகாரம் பெறுவதுபோல, கந்த சஷ்டி கவசம் அரங்கேற்றப்பட்ட, சென்னிமலையில், சஷ்டியின்போது முருகனை தரிசனம் செய்து, செவ்வாய் தோஷம் நீங்கப்பெறுவர். சஞ்சீவி மூலிகைகள்: நோய் தீர்க்கும் வல்லமை கொண்ட, சஞ்சீவி மூலிகைகள் பல, சென்னிமலை மலையில் உள்ளன. இம்மலையில் வெண்சாரை, வெண்தவளை, கானாச்சுனை, கெயாத எட்டி, கரநொச்சி முதலிய சஞ்சீவி மூலிகைகள் இருப்பதாக சொல்லப்படுகிறது. உடற்பிணி நீங்க வேண்டி, பல தலங்கள் சென்று வழிபட்டு, இத்தலத்தை வந்தடைந்து, சென்னிமலை ஆண்டவனை வணங்கி, நோய் நீங்க பெற்ற சோழ அரசரான சிவாலயச் சோழன், அதற்கு பரிகாரமாகவே, மலைக்கோவிலை அமைத்தார், என்பர். வானில் வந்தவர் இங்கேயே வாழ்ந்தார்: இறைவன் கிருபையும், அருளையும் மறுத்துரைப்பவர்கள், பொய் சொல்பவர்கள் நாவானது புண் பொருந்திய நாக்கு' எனக்கூறியவர் தன்னாச்சி அப்பன் சித்தர். 18 சித்தர்களில் ஒருவரான இவரை முனிவர் என்றும், புண் நாக்கு' சித்தர் என்றும் அழைத்தனர். பிற்காலத்தில் புண்ணாக்குச் சித்தர்' என்று பெயர் மருவியது. இவர், தனது நாக்கை பின்புறமாக மடித்து, அருள்வாக்கு சொல்லி வந்ததாலும், இவர் பின்நாக்கு சித்தர் என அழைக்கப்பட்டார். சித்தராக வானவீதி வழியாக பறந்து வந்த இவர், நிலையாக இவ்வாலயத்தில் இருந்து, சென்னிமலை சுப்ரமணியரை நினைத்து, யோக நிலையில் தவம் புரிந்தார். பின்னர் சென்னிமலையிலேயே, புண்ணாக்குச் சித்தர் சிவசமாதி அடைந்தார். அவர் சமாதி அடைந்த பின், அவருடைய சிலையை, தற்போதைய இடத்தில் நிறுவி, பக்தர்கள் வழிபட்டு வருகின்றனர். ஆண்டி வடிவில் அமைந்து அருள்பாலிக்கும் முருகனிடம், தன்னை முழுமையாக அர்ப்பணித்தவர் புண்ணாக்குச் சித்தர். சென்னிமலையில், 1,740 அடி உயரத்தில் குகை வடிவில் அமைந்துள்ள கோவிலில், இவர் அருள்பாலிக்கிறார். வள்ளி, தெய்வானை சன்னதிக்கு மேல், 800 அடி நீளப்பாதையில் கிழக்கு முகமாக இக்குகை உள்ளது. மக்கள் குறையைப் போக்கும் ஆலயமாக விளங்குகிறது. இக்குகை, பழனி வரை செல்வதாக நம்பப்படுகிறது. 20 தீர்த்தங்கள் கொண்ட சென்னியங்கிரி மலை: சென்னிமலை, மலைக்கோவிலில், 20 வகை தீர்த்தங்கள் உள்ளன. இந்திர தீர்த்தம், அக்னி தீர்த்தம், இமயன் தீர்த்தம், காசிபதீர்த்தம், பட்சி தீர்த்தம், நிருதிதீர்த்தம், சிவகங்கை காசிக்கிணறு, மாமங்க தீர்த்தம், வரடி தீர்த்தம், காளி தீர்த்தம், தேவி தீர்த்தம், செங்கழுநீர், வாலி விஷ்ணு தீர்த்தம், நெடுமால் சுனை, பிரம்ம தீர்த்தம், தேவர்பாழி, நவவீர தீர்த்தம், சாரதா தீர்த்தம், மார்க்கண்டேய தீர்த்தம், தெப்பக்குளம் முதலிய தீர்த்தங்கள் இத்தலத்தில் உள்ளன. இத்தனை தீர்த்தங்கள் இருந்தாலும், சென்னிமலை ஆண்டவரின் தினசரி அபிஷேகம் மற்றும் நைவேத்திய காரியங்களுக்கு, மலை அடிவாரத்தில் இருந்து திருமஞ்சன தீர்த்தம், மலைக்கு கொண்டு செல்லப்படுகிறது.

* நொய்யல் ஆற்றுக்கு அருகில் வாழ்ந்து வந்த ஒருவர் தாம் வளர்க்கும் பசு தினந்தோறும் யாருக்கும் தெரியாமல் சென்று ஒரு குறிப்பிட்ட இடத்தில் பால் சொரிந்தது. இதை ஒருநாள் கவனித்து விட்ட உரிமையாளர் அந்த குறிப்பிட்ட இடத்தை தோண்டிப்பார்க்க அங்கு அழகிய முருகப்பெருமான் சிலை இடுப்பு வரை நல்ல வேலைப்பாடுடன் இருக்க இடுப்புக்கு கீழ் பாதம் வரை கரடுமுரடாக இருக்க அதை உளி கொண்டு செதுக்க முயன்றார். அப்போது சிலையில் இருந்து ரத்தம் பீறிட்டது. அதைக் கண்டு எல்லோரும் பயந்து போய் வேலையை நிறுத்தி விட்டு அங்கு வாழ்ந்த சரவண முனிவர் அருளாசிப்படி ஆண்டவர் அப்படியே இருக்கப் பிரியப்படுகிறார் என்று அறிந்து சிலையை அப்படியே சென்னிமலை மீது பிரதிஷ்டை செய்து வழிபட்டனர் என்று வரலாற்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள். சிலை இடுப்புக்கு கீழ் வேலைப்பாடற்று இருப்பதை இன்றும் காணலாம். தவிர ஆதிசேஷனுக்கும் வாயு பகவானுக்கும் யுத்தம் ஏற்பட்டபோது ஆதிசேஷனுடைய சிரம் விழுந்த இடம் சென்னி மலை என்று கூறுகின்றனர்.


 * சத்தியஞானி புண்ணாக்கு சித்தர். மலைமேல் இவர் குகை உள்ளது. அம்மன் சன்னதியிலிருந்து பின்புறம் சென்றால் மலையின் உச்சியில் 18 சித்தர்களில் ஒருவரான பின் நாக்கு சித்தர் (புண்ணாக்கு சித்தர் கோயில் வேல்கள் நிறைந்து வேல்கோட்டமாக அமைந்துள்ளது. இதன் அருகே சரவணமாமுனிவரின் சமாதிக் கோயிலும் உள்ளது.

அருள்மிகு பால தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவில்,பச்சைமலை

கோவில் பெயர் : அருள்மிகு பால தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவில்

முருகன் பெயர்  : பால தண்டாயுதபாணி

கோவில் திறக்கும் நேரம் :   காலை 6 மணி முதல் 11 மணி வரை மாலை 4 மணி 8 முதல் இரவு மணி வரை. 

முகவரி : அருள்மிகு பச்சைமலை பால தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவில்,
கோபிசெட்டிபாளையம் - 638476
                                           தொலைபேசி எண்: 04285 222125

கோவில் சிறப்பு : 

பிரார்த்தனை நோயுற்றவர்கள் கோயில் மண்டபத்தில் தங்கி தரிசித்து வழிபாடு செய்கின்றனர் இதன்மூலம் குணம் பெற்று செல்பவர்கள் தங்கள் நேர்த்திக்கடன்களை செலுத்தி நலம்பெறுகின்றனர். நேர்த்திக்கடன்: சுவாமி அபிஷேகம் செய்தும், வஸ்திரம் அணிவித்தும் நேர்த்திக்கடன் நிறைவேற்றலாம்.

தலபெருமை:
ஆண்டாண்டு காலங்களாக ஆன்றோரும், சான்றோரும் வழி வழியாய் வழிபடும் அற்புத ஸ்தலமாக கோபிசெட்டிபாளையம் ஆண்டவர் மலை முருகன் கோயில் திகழ்கிறது. குன்று இருக்கும் இடமெல்லாம் குமரன் குடிகொண்டிருப்பான் என்பதை உணர்த்தும் விதத்தில் கோபியில் உள்ள மூன்று குன்றுகளிலும் முருகப்பெருமான் வெவ்வேறு ரூபங்களில் வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். கோபியில் பச்சைமலை, பவளமலை, ஆண்டவர்மலை என மூன்று குன்றுகள் இயற்கையாகவே அமையப்பெற்றுள்ளது. பச்சைமலை குன்றில் பாலமுருகனாகவும், பவளமலை குன்றில் முத்துக்குமார சுவாமியாகவும், ஆண்டவர்மலை குன்றில் பால தண்டாயுதபாணி சுவாமியாகவும் வேண்டுவோருக்கு வேண்டுவனவற்றை வழங்கி பக்தர்களின் மனதில் நீங்கா இடம் பெற்று விளங்குகிறார். சங்க இலக்கியம், தமிழ்ச்சங்கம், சங்கத்தமிழ் ஆகிய எல்லா சூழ்நிலைகளிலும் போற்றி புகழப்படும் தெய்வம் முருகப்பெருமான். சிவபெருமானின் ஐந்து முகச்சுடரும், நெற்றி கண்ணின் சுடரும் சேர்ந்து ஆறுபொறிகளால் உதித்தவர் ஆறுமுகன். சமயங்கள் 6, கோஷங்கள் 6, ஆதார கமலங்கள் 6, வேத இதிகாசங்கள் 6, ஞான சாதனை 6, சாஸ்திரம் 6 ஆகிய ஆறு அம்சங்களும் முருகப்பெருமானுக்கு உரியவை.இப்படிப்பட்ட கருணைக்கடலாக விளங்கும் பாலதண்டாயுதபாணி சுவாமி ஆண்டவர் மலை குன்றில் நின்றகோலத்தில் வீற்றிருந்து வேண்டுவோருக்கு வேண்டுவனவற்றை வாரி வழங்கி அருள்பொழிந்து வருகிறார்.

செவ்வாய், 1 நவம்பர், 2016

அருள்மிகு வெற்றி வேலாயுதசுவாமி திருக்கோவில்,ஊத்துக்குளி

கோவில் பெயர் : அருள்மிகு வெற்றி வேலாயுதசுவாமி திருக்கோவில்

முருகன் பெயர்  : வெற்றி வேலாயுதன்

கோவில் திறக்கும் நேரம் :   காலை 6 மணி முதல் 11 மணி வரை மாலை 5 மணி 8 முதல் இரவு மணி வரை. 

முகவரி : அருள்மிகு வெற்றி வேலாயுதசுவாமி திருக்கோவில்,
ஊத்துக்குளி , திருப்பூர் - 638 751
தொலைபேசி எண்: 04294-262052

கோவில் சிறப்பு : 

பிரார்த்தனை திருமணத்தில் தடை உள்ளவர்கள், பிரிந்த தம்பதியினர் இங்கு பிரார்த்தனை செய்கின்றனர். நேர்த்திக்கடன்: முருகனுக்கு பால் அபிஷேகம் செய்து புது வஸ்திரம் சாற்றி வழிபடுகின்றனர். தலபெருமை: குன்று இருக்கும் இடமெல்லாம் குமரன் இருப்பான்' என்பதற்கேற்ப ஈரோடு மாவட்டத்தில் உள்ள ஊத்துக்குளி கதித்தமலையில் முருகப்பெருமான் அருள்பாலித்து வருகிறார். அருணகிரிநாதரால் பாடல் பெற்றதும், அகத்தியர் பூஜித்த பெருமை பெற்றதுமான இத்தலம் சிறந்த பிரார்த்தனை தலமாக விளங்குகிறது. கோயிலில் மூலவரான வெற்றி வேலாயுதசுவாமி வள்ளி தெய்வானை இல்லாமல் தனியாக நின்ற கோலத்தில் அருள் பாலிக்கிறார். வள்ளி தெய்வானை தனி சன்னதிக்கான காரணம்: சூரபத்மனை வதம் செய்த பிறகு முருகன் தனிமையில் இருந்தார். அவரை மணம் முடிக்க விரும்பிய இந்தப் பெண்கள் இம்மலைக்கு வந்து முருகன் தங்களை ஆட்கொள் ளுமாறு வேண்டினர். அவரது அருளாசியின்படி இந்திரனின் மகளாக தெய்வானையும், நம் பிராஜனின் வளர்ப்பு மகளாக வள்ளியும் அவதரித்தனர். திருமணத்துக்கு முன்னதான நிலை என்பதால், இவர்களுக்கு தனி சன்னதி தரப்பட்டுள்ளது. மற்றொரு காரணமும் சொல்லப்படுகிறது. வள்ளி, தெய்வானை, வேல் ஆகியன முறையே இச்சாசக்தி, கிரியாசக்தி, ஞானசக்தி ஆகியவை. ஆசை, செயல், அறிவு என் னும் மூன்று சக்திகளை குறிக் கின்றன. இவை மூன்றும் பரப் பிரம்மமாகிய முருகனுக்குள் அடங்கியுள்ளது. பெரும்பாலான முருகன் கோயில்களில் இச்சா சக்தியும், கிரியா சக்தியும் அவருக்கு இருபக்கம் வைக்கப்பட்டு, ஞான சக்தியான வேல் மட்டும் அவரது மார்பின் மேல் வைக்கப்படும். ஞானசக்தி தான் இம் மூன்றில் முக்கியமானது. இச்சையும், கிரியையும் இருந்தால் தான் ஞானம் பெற முடியும். ஆனால், அபூர்வ சக்தி படைத்த முருகன், இவ்விரண்டும் இல்லாமலே ஞானசக்தி பெற்றவர் என்பதையும் இது காட்டுகிறது.

அருள்மிகு குக்கி சுப்ரமண்யர் கோவில்

கோவில் பெயர் : அருள்மிகு குக்கி சுப்ரமண்யர் கோவில்

முருகன் பெயர்  : குக்கி சுப்ரமண்யர் திருக்கோவில்

கோவில் திறக்கும் நேரம் :   காலை 6 மணி முதல் 1.30 மணி வரை, 
                                                       மாலை 3 மணி முதல் இரவு 8 மணி  வரை. 

                               முகவரி : அருள்மிகுகுக்கி சுப்ரமண்யர் திருக்கோவில்,
                                           Kukke Shree Subrahmanya Temple 
                                          Subrahmanya Sullia ,Dakshina Kannada District
                                        Pin -574 238, Ph: 91-8257-281224,91-8257- 281423
                                      91-8257-281700 (E.O)
                                   91-8257-281300 (Sarpa Samskara Section)

கோவில் சிறப்பு : 

* இத்தலத்து குக்கி சுப்ரமணியசுவாமி கோவில், கர்நாடக மாநிலத்தில் அமைந்துள்ள மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள அடர்ந்த காட்டில் குமார மலையில் அழகான குக்கி சுப்ரமண்யா எனும் கிராமத்தில் அமைந்துள்ளது. இந்த குமார மலையைப் பாதுகாக்கும் விதமாக இதன் அருகே ஆறு தலை பாம்பு வடிவத்தில், சேஷமலை அமைந்துள்ளது. 

* புராணக்கதைப்படி, சுப்பிரமணியசுவாமி, தாருகாசூரன், சூரபதுமன் மற்றும் மற்ற கொடிய அசுரர்களைப் போரில் வென்று கொன்ற பின்பு, சுப்பிரமணியசுவாமி, தன் அண்ணன் கணபதி மற்றும் மற்றவர்களுடன், இக்குமாரமலையில் தங்கினார்கள். அப்போது தேவர்களின் தலைவன் இந்திரன் மற்றும் மற்ற தேவர்கள் சுப்பிரமணியசுவாமியை மகிழ்ந்து வரவேற்றனர். இந்திரனின் மகளான தேவசேனாவை, சுப்பிரமணிய சுவாமிக்கு திருமணம் செய்து கொடுக்க இந்திரன் விரும்பினான். இந்திரனின் விருப்பத்தை நிறைவேற்ற, சுப்பிரமணியசுவாமி தேவசேனாவை மணந்தார். இத்தேவ திருமணம், குமாரமலையில் நடந்தது. பிரம்மா, விஷ்ணு மற்றும் சிவன் மற்றும் இதர தேவர்கள் எழுந்தருளி, தேவசேனா உடனாய சுப்பிரமணியசுவாமிக்கு மங்கல வாழ்த்துக்கள் தெரிவித்தனர். அன்று முதல் தேவசேனா உடனாய சுப்பிரமணியசுவாமி இங்கு எழுந்தருளி பக்தர்களுக்குக் காட்சி அளிக்கிறார்.

* பக்தர்கள் கோவில் செல்வதற்கு முன், கோயிலுக்கு அருகில் ஓடும் குமாரதாரா எனும் நதியில் புனித நீராடிவிட்டு குக்கி சுப்பிரமணியசுவாமி கோவில் செல்ல வேண்டும். மேலும் கோயிலின் முன் மண்டபத்திற்கும் கர்ப்பகிரகத்திற்கும் நடுவே உள்ள கருடனின் வெள்ளித்தூணை வலம் வந்து, வெள்ளித்தூணில் பொதிந்துள்ள கருடனை வழிபட்டால் சர்ப்பங்கள் வெளிவிடும் விஷத்தை எதிர்கொள்ள முடியும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. டிசம்பர் மாதத்தில் இக்கோயிலில் மூலவரை பூசை செய்யும் நம்பூதிரிகள், வாழை இலைகளில் விருந்து உணவு உண்டபின், அந்த வாழை இலைகளை வரிசையாக பரப்பி அதன் மேல் அங்கப்பிரதட்சனம் செய்தால் நன்மை பயக்கும் என பக்தர்கள் நம்புகின்றனர்.

* சிறப்பு பூசைகள்
டிசம்பர் மாதத்தில் மூன்று நாட்கள், குமாரதார ஆற்றில் புனித நீராடி முருகனை வழிபடுதல் சிறப்பாகும். குக்கி சுப்பிரமணியசுவாமி கோயிலில் நடைபெறும் சர்ப்ப சம்கார பூசை எனும் நாக தோச நிவர்த்தி பரிகார பூசை சிறப்பான பூசையாகும். மேலும் அஸ்லேஷா நட்சத்திர (Ashlesha Nakshatra) நாளில் செய்யப்படும் நாகதோச நிவர்த்தி பரிகார பூசை சிறப்பாக நடைபெறுகிறது.

ஞாயிறு, 30 அக்டோபர், 2016

அருள்மிகு ரத்தினகிரி முருகன் திருக்கோவில்

கோவில் பெயர் : அருள்மிகு ரத்தினகிரி முருகன்   திருக்கோவில்

முருகன் பெயர்  : ரத்தினகிரி முருகன்

கோவில் திறக்கும் நேரம் :  காலை 6 மணி முதல் 2 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 7.30 மணி வரை.

முகவரி :  அருள்மிகு ரத்தினகிரி முருகன்   திருக்கோவில்,
வாலாஜா தாலுகாவில், வேலூர் மாவட்டம்.
தமிழ்நாடு - 632 517 இந்தியா
தொலைபேசி: (91) 4172 266330 (அலுவலகம்)
தொலைபேசி: (91) 4172 266350 (கோவில்)

கோவில் சிறப்பு :

* இத்தலத்தில் பாறையில் தானாக தோன்றிய சுயம்பு விநாயகர் அருள்பாலிக்கிறார்.

* பிரார்த்தனை முருகன் தலம் ஒன்றில் சூபூப்பறித்தல் நோன்பு' என்ற சடங்கு பிரபலமாக உள்ளது. இந்த நோன்பை நோற்பவர்கள், திருமணத்தடை நீங்கி, விரும்பிய வாழ்க்கைத் துணையை அடைவர் என்பது நம்பிக்கை. இங்கு வேண்டிக்கொள்ள புத்திரபாக்கியம் கிட்டும், பயம் நீங்கும், தீராத நோய்கள், மனக்குறைகள் தீரும், தொழில் விருத்தியடைந்து சகல செல்வங்களும் பெருகும். நேர்த்திக்கடன்: சுவாமிக்கு வன்னி இலைகளால் அர்ச்சனை மற்றும் பால்அபிஷேகம் செய்து பால்குடம் எடுக்கப்படுகிறது. அன்னதானமும் செய்யலாம். தலபெருமை: பல்லாண்டுகளுக்கு முன்பு முருகனின் தீவிர பக்தையான பெண் ஒருவர் நீண்ட வருடங்களாக குழந்தைபாக்கியம் இன்றி தவித்தார். தினசரி ரத்தினகிரியில் குடிகொண்டிருந்த முருகனை தரிசித்து தனக்கு குழந்தை வரம் தரும்படி மனமுருகி வேண்டி கடும் விரதம் மேற்கொண்டார். ஓரு நாள் அவர் தனிமையில் யாரும் இல்லாத வேளையில் ரத்தினகிரிக்கு வந்து முருகனை நீண்ட நேரம் வணங்கி, தனது குறையைக் கூறி கண்ணீர் விட்டு சுவாமியை வலம் வந்தார். அப்போது அங்கு வந்த ஆடுமேய்க்கும் சிறுவன் ஒருவன் அவரிடம், அழுவதற்கான காரணத்தைக் கேட்க அவர், தனக்கு புத்திர பாக்கியம் இல்லாததைக் கூறி வருந்தினார். அவர் கூறியதை பொறுமையுடன் கேட்ட அச்சிறுவன் கோயிலில் இருந்த விபூதியை எடுத்து அவரிடம் கொடுத்து விட்டு பக்தியுடன் சுவாமியை வலம் வரும்படி கூறினான். அதன்படி அப்பெண் பக்தை விபூதியை பெற்றுக்கொண்டு சுவாமியை வலம் வந்தார். சுவாமியை ஒரு முறை வலம் வந்த அவர் தன்னிடம் விபூதி கொடுத்த சிறுவனைக் காணாது அதிர்ந்தார். இச்சம்பவம் நிகழ்ந்த சில தினங்களிலேயே அப்பெண் கருவுற்றார். அதன் பின்பே அவரிடம் ஆடு மேய்க்கும் சிறுவனாக வந்து பேசியது முருகப்பெருமான் தான் என அறிந்து கொண்டார். முருகனே நேரில் வந்து பெண் பக்தைக்காக அருள்புரிந்து அற்புதம் நிகழ்த்திய சிறந்த தலம். இத்தலத்தில் உள்ள முருகன் நான்கு கைகளுடன் ஆயுதங்கள் ஏந்தியபடி இடதுபுறம் நோக்கிய மயிலுடன் பிரபாவளையத்துடன் அருட்காட்சி தருகிறார். பூப்பறிக்கும் சடங்கு : இந்தக் கோயிலில் சில ஆண்டுகளுக்கு முன்பு வரை ஒரு பழக்கம் இருந்தது. முறைப்பெண்ணும், முறை மாப்பிள்ளைகளும் பொங்கலுக்கு மறுநாள் இங்கு வருவர். தங்கள் அன்பைப் பரிமாறிக் கொள்ளும் வகையில், தாங்கள் கொண்டு வரும் பூக்களை மாப்பிள்ளைகள் தங்கள் வருங்கால மனைவியருக்கு சூட்டுவர். பின்னர், முருகப்பெருமானுக்கு மாலையணிவித்து தங்களை மணமக்களாக சிரமமின்றி இணைத்து வைக்க வேண்டுவர். இந்த வழிபாட்டிற்கு சூபூப்பறித்தல் நோன்பு' என்று பெயர். இப்பழக்கம் தற்போதைய நாகரீகத்தின் காரணமாக குறைந்து விட்டது. இருப்பினும், விஷயமறிந்த காதலர்கள் இப்போதும் இங்கு வந்து முருகனை வழிபட்டுச் செல்கின்றனர். எப்படியிருப்பினும், இக்கோயிலுக்கு வருபவர்கள் தங்கள் கையாலேயே மலர் பறித்து, மாலை கட்டி முருகனுக்கு அணிவித்தால் நினைத்த கணவன் அல்லது மனைவியை அடையலாம் என்ற நம்பிக்கை மட்டும் இன்றளவும் இருக்கிறது. திருமணத்துக்கு பிறகு தம்பதி சமேதராக வந்து வணங்கிச் சென்றால் நல்ல குழந்தைகள் பிறக்கும் என்பதும் நம்பிக்கை. பள்ளிக்காலத்து நண்பர்கள் பணி காரணமாக வேறு ஊரில் இருந்தால், பொங்கலன்று தங்கள் ஊருக்கு வந்து விடுகின்றனர். அவர்கள் பொங்கலுக்கு மறுநாள் மலைக்கோயிலுக்கு வந்து தங்கள் பழைய நினைவுகளைப் பகிர்ந்து கொள்ளும் வழக்கமும் இருக்கிறது.

அருள்மிகு ஓதிமலையாண்டவர் திருக்கோவில்

கோவில் பெயர் : அருள்மிகு ஓதிமலையாண்டவர்  திருக்கோவில்

முருகன் பெயர்  : ஓதிமலையாண்டவர்

கோவில் திறக்கும் நேரம் :  திங்கள், வெள்ளி, சஷ்டி, கிருத்திகை, அமாவாசை ஆகிய நாட்களில் காலை 11 - மாலை 6 மணி வரையில் சுவாமியை தரிசிக்கலாம். இதுதவிர மார்கழி மாதம் மற்றும் முருகனுக்கான விசேஷ நாட்களில் நடை திறந்திருக்கும். பிற நேரங்களில் செல்ல விரும்புவோர் முன்னதாக போனில் தொடர்பு கொண்டுவிட்டுச் செல்ல வேண்டும்.

முகவரி :   அருள்மிகு ஓதிமலையாண்டவர்  திருக்கோவில்
04254 - 287 418, 98659 70586

கோவில் சிறப்பு :

* ஐந்து முக முருகன், போகர் என்ற சித்தர் யாகம் செய்த இடத்தில் உள்ள மணல், தற்போதும் வெண்ணிறமாக இருக்கிறது. விசேஷ காலங்களில் இதையே பிரசாதமாக கொடுக்கின்றனர்.

* வெண்மணல் பிரசாதம்: சித்தர்களில் ஒருவரான போகர், முருகனைத் தரிசிக்க பழநிக்குச் சென்றார். அப்போது அவருக்கு சரியாக வழி தெரியவில்லை. வழியில் இத்தலத்தில் தங்கிய அவர் முருகனை வேண்டி, யாகம் நடத்தினார். அப்போது இத்தலத்து முருகன், அவருக்கு வழிகாட்டினார். வழிகாட்டிய முருகன் இத்தலத்திலிருந்து சற்று தூரத்திலுள்ள குமாரபாளையம் நாகநாதேஸ்வரர் கோயிலில் ஒரு முகத்துடன் காட்சி தருகிறார். ஆறு முகங்களுடன் உள்ள முருகன், போகருக்கு வழிகாட்ட ஒரு முகத்துடன் சென்றதால், ஓதிமலையில் ஐந்து முகங்களுடனும், இத்தலத்தில் ஒரு முகத்துடனும் இருப்பதாக சொல்கிறார்கள். தலவிநாயகர், அனுக்கை விநாயகர் என்றழைக்கப்படுகிறார்.

* பிரார்த்தனை இத்தலத்தில் பக்தர்கள் தாங்கள் எந்த செயலையும் துவங்கும் முன்பு, முருகனிடம் பூ வைத்து உத்தரவு கேட்டு அதன்பின்பே செயல்படுகின்றனர். இதை, "வரம் கேட்டல்' என்கிறார்கள். கல்வி, கலைகளில் சிறப்பிடம் பெற, தவறுக்கு மன்னிப்பு கிடைக்க இவரிடம் வேண்டிக்கொள்கிறார்கள். நேர்த்திக்கடன்: சுவாமிக்கு பாலபிஷேகம், சந்தனக்காப்பு செய்து வஸ்திரம் அணிவித்து நேர்த்திக்கடன் செலுத்தலாம். தலபெருமை: அம்பிகை இல்லாத சிவத்தலம்: படைப்புத்தொழில் செய்தபோது இருந்த அமைப்பில் இங்கு முருகன் ஐந்து முகம், 8 கரங்களில் ஆயுதங்களுடன் காட்சி தருகிறார். முருகன், சிவ அம்சம் என்பதால் அவரைப்போல ஐந்து தலைகளுடன் இருப்பதாகவும் சொல்கிறார்கள். இத்தகைய அமைப்பை காண்பது அபூர்வம். இந்த அமைப்பிலுள்ள முருகனை, "கவுஞ்சவேதமூர்த்தி' என்று அழைக்கிறார்கள். கல்வி, கலைகளில் சிறந்து திகழ இவரிடம் வேண்டிக்கொள்கிறார்கள். மலையடிவாரத்தில் சுயம்பு விநாயகர் இருக்கிறார். இவரை வணங்கிவிட்டே முருகனை தரிசிக்க வேண்டும் என்பது ஐதீகம். மலைக்கோயில் சோமாஸ்கந்த அமைப்பில் அமைக்கப்பட்டுள்ளது. முருகனுக்கு வலப்புறத்தில் காசிவிஸ்வநாதர், இடப்புறம் காசி விசாலாட்சி தனித்தனி சன்னதிகளில் காட்சி தருகின்றனர். இடும்பன், சப்தகன்னியருக்கும் சன்னதி இருக்கிறது. முருகனிடம் பிரம்மவை விடுவிக்கும்படி பரிந்துரைத்த சிவபெருமான், கைலாசநாதராக மலையடிவாரத்தில் தனிக்கோயிலில் இருக்கிறார். முருகனை சந்தித்தபோது, சிவபெருமான் மட்டும் தனித்து வந்தார். உடன் அம்பிகை வரவில்லை. எனவே இக்கோயிலில் அம்பிகை சன்னதி கிடையாது. பிரம்மாவை முருகன், இரும்பு அறையில் சிறைப்படுத்தியதால் இவ்வூர் "இரும்பறை' என்று அழைக்கப்படுகிறது.

வியாழன், 27 அக்டோபர், 2016

அருள்மிகு முருகன் திருக்கோவில் ,மருதமலை

கோவில் பெயர் : அருள்மிகு முருகன்  திருக்கோவில்

முருகன் பெயர்  : முருகனின் வேல்

கோவில் திறக்கும் நேரம் :   காலை 9 மணி 12 முதல் மணி வரை,
 மாலை 5 மணி முதல் இரவு 6 மணி வரை.

முகவரி : அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில்
மருதமலை,கோயம்புத்தூர் - 641 046.Ph: 0422 2422490

கோவில் சிறப்பு :

* முருகன் கோயிலுக்கு அருகில் பாம்பாட்டி சித்தரின் குகைக்கோயில் அமைந்துள்ளது. வரலாற்று சிறப்புமிக்க பதினெட்டு சித்தர்களுள் ஒருவரான பாம்பாட்டி சித்தர், இந்த குகையில் சில காலம் வசித்து வந்தார். பல மூலிகைகளின் பயன்கள் மற்றும் மருத்துவ குணங்களைப் பற்றிய அவரது குறிப்புகள் மிகவும் சிறப்பானவையாகக் கருதப்படுகிறது.

அருணகிரிநாதர் திருப்புகழில் மருதமலை முருகனைப் பாடியுள்ளார்.
திரிபுரம் அதனை ஒரு நொடியதனில்
எரிசெய் தருளிய சிவன் வாழ்வே!
சினமுடைஅசுரர் மனமது வெருவ
மயிலது முடுகி விடுவோனே!
பருவரை யதனை உருவிட எறியும்
அறுமுகமுடைய வடிவேலா!
பசலையொ டணையும் இளமுலை மகளை
மதன்விடு பகழி தொடலாமோ!
கரிதிரு முகமும் இடமுடை வயிறும்
உடையவர் பிறகு வருவானே!
கனதனமுடைய குறவர்தம் மகளை
கருணையொ டணையும் மணிமார்பா!
அரவணை துயிலும் அரிதிரு மருக
அணிசெயு மருத மலையோனே!
அடியவர்வினையும் அமரர்கள் துயரும்
அற அருள் உதவு பெருமாளே!

* முருகப்பெருமானின் ஏழாவது படைவீடாகக் கருதப்படும் மருதமலை, முற்காலத்தில் கொங்கு வேட்டுவ மன்னர்களால் பராமரிக்கப்பட்டு வந்தது. மருதமலை முருகன் கோயில் தற்போது தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. தேவாரப் பாடல் பெற்ற தலமான திருமுருகன்பூண்டி கோயில் கல்வெட்டுகளில், மருதமலை கோயில் 12 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்ததாகத் தகவல்கள் உள்ளன.

* மருதமலை முருகன் கோயில் , கோயம்புத்தூரிலிருந்து 15 கிமீ தொலைவிலுள்ள மருதமலை மேல் அமைந்துள்ளது. அருணகிரிநாதரால் திருப்புகழில் பாடப்பெற்ற தலமிது. இக்கோவிலின் முதன்மைக் கடவுளான முருகன், இங்கு சுப்பிரமணிய சுவாமி என்றும் தண்டாயுதபாணி என்றும் மருதாசலமூர்த்தி என்றும் அழைக்கப்படுகிறார். மருதமலையின் அடிவாரத்தில் தான்தோன்றி விநாயகர் என்ற ஒரு சிறிய விநாயகர் கோயிலும் உள்ளது.

அருள்மிகு உத்தண்ட வேலாயுத சுவாமி திருக்கோவில்,கோயம்புத்தூர்


கோவில் பெயர் :  அருள்மிகு உத்தண்ட வேலாயுத சுவாமி திருக்கோவில் 

முருகன் பெயர்  : உத்தண்ட வேலாயுத சுவாமி 

கோவில் திறக்கும் நேரம் :   காலை 9 மணி 12 முதல் மணி வரை, 
மாலை 5 மணி முதல் இரவு 6 மணி வரை.

முகவரி : அருள்மிகு உத்தண்ட வேலாயுத சுவாமி,திருக்கோவில்
ஊதியூர், கோயம்புத்தூர். Ph:04257 249977, 97880 10161  

கோவில் சிறப்பு : 

* மலையின் வடபுறம், கொங்கண சித்தர் பொன் ஊதியத்திற்கு அடையாளமாக மண் குழாய்கள் பல இன்றும் காணப்படுவது சிறப்பு. ராம லக்ஷ்மணனைக்காக அனுமன் சஞ்சீவி மலையை எடுத்துவந்த போது, அதன் ஒரு பகுதி கொங்குநாட்டில் விழுந்தது. அந்த மலையை சஞ்சீவி மலை என்றும் ஊதியூர் மலை என்றும் அழைக்கப்படுகிறது. மலையில் உத்தண்ட வேலாயுத சுவாமி எழுந்தருளியுள்ளார்.

 மலையின் இடைப்பகுதியில் முருகன் கோவில் உள்ளது. மலைப்பகுதியின் தொடக்கத்தில் மிகவும் அழகிய மயில் மண்டபம் உள்ளது. அடுத்து இருப்பது பாதவிநாயகர் கோவில், வழியில் வடபுறம் இடும்பன் கோயிலும், தென்புறம் அனுமந்தராயன் கோயிலும் உள்ளன. கடந்து மேலே சென்றால் நுழைவாயிலோடு கூடிய ஒரு மண்டபம் இருக்கிறது. அதைக் குறட்டு வாசல் என்பர்.

 சித்தர்கள் வாழ்ந்த இம்மலைமீது விளங்கும் இறைவனை தரிசித்தவர், வாழ்வில் தரித்ததிரங்கள் நீங்கி வளம் பெறுவர் என்பது ஐதீகம். கொங்கணச் சித்தர் வாழ்வுடனும் வரலாற்றுடனும் தொடர்புப்படுத்திக் கூறப்படுவதால், ஊதியூர் மலை, கொங்கணகிரி எனவும் அழைக்கப்படுகிறது.

பிரார்த்தனை:

பலருக்கும் இத்தலத்து வேலாயுத சுவாமி குல தெய்வமாகவும், இஷ்டதெய்வமாகவும் விளங்குகிறார். இப்பகுதியைச் சேர்ந்தவர்கள் எந்த சுப காரியங்களை செய்வதென்றாலும், வேலாயுத சுவாமியின் உத்தரவு பெற்றே மேற்கொள்கின்றனர். அப்படிச் செய்வதால், தாங்கள் செய்யும் காரியங்களில் எந்தத் தடையும் ஏற்படாமல் வெற்றியே கிட்டும் என்பது நம்பிக்கை.  

நேர்த்திக்கடன்:

திருமணத்தடை, குழந்தைப்பேறின்மை உள்பட அனைத்து பிரச்னைகளும் அகல ஒன்பது செவ்வாய்க்கிழமைகள் வேலாயுதசுவாமிக்கு அபிஷேக, ஆராதனைகள் செய்து, நெய்தீபம் ஏற்றி வழிபட்டால், நற்பலன் விரைவாக கிட்டுகிறது. என்று மனப்பூர்வமாக நம்புகின்றனர் பக்தர்கள்.  

அருள்மிகு சுப்பிரமணிய திருக்கோவில்,பொள்ளாச்சி


கோவில் பெயர் : அருள்மிகு சுப்பிரமணிய திருக்கோவில் 

முருகன் பெயர்  : சுப்பிரமணிய சுவாமி 

கோவில் திறக்கும் நேரம் :   காலை 7 மணி 10 முதல் மணி வரை, 
மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை.

முகவரி : அருள்மிகு சுப்பிரமணிய திருக்கோவில் 
பொள்ளாச்சி - 642 001.
Phone No : 04259 229054
Phone No (E.O) : 99769 50644


கோவில் சிறப்பு : 

* மூலவர் முருகன், திருவாச்சி மற்றும் மயில் சிலைகள் ஒரே கல்லில் ஆனவை என்பது சிறப்பாகும். இக்கோயில் சோழர்களால் கட்டப்பட்டது.


* பிரார்த்தனை துர்க்கைக்கு செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் ராகுகால பூஜை நடத்தினால் தடைப்பட்ட திருமணங்கள் நடந்தேறும் என பக்தர்கள் நம்புகின்றனர். நேர்த்திக்கடன்: சுவாமிக்கு பால்குடம் எடுத்தும், அலகு குத்தியும் அபிஷேகம் செய்தும் நேர்த்திகடன் செலுத்துகின்றனர். தலபெருமை: கோயில் கிழக்கு நோக்கி ஒரு சுற்றுப் பிராகாரத்துடன் அமைந்துள்ளது. சிவன் சன்னதி முன்பு ராஜ கோபுரமும், முருகன் கோயில் முன்பு சிறிய முகப்பும் உள்ளன. கருவறையில் முருகப் பெருமான் வள்ளி தேவசேனா சமேதராய் அருள்பாலிக்கின்றார். முருகன் மயில் மீது ஒரு முகத்துடன் நான்கு கரங்களுடன் உள்ளார். சுகாசனத்தில் அமர்ந்த கோலத்தில் பின் கைகளில் சக்தி ஆயுதமும், வச்சிரமும் இருக்க, முன் கைகளில் அபய வரத முத்திரை காட்டி காட்சி தருகிறார். மயிலின் தலைப்பகுதி இடப்புறமாக இருப்பதால் இது தேவ மயில் எனப்படும். திருவாச்சி, மயில் மற்றும் முருகன் சிலைகள் ஒரே கல்லில் ஆனவை என்பது சிறப்பாகும். தேவியர் இருவர் கரங்களில் ஒரு கரத்தில் மலர் தாங்கி மற்றொரு கரம் கை கத்ய வலம்பித முத்திரை காட்டிட உள்ளனர். கருவறையின் கல்நிலவுப் பகுதியில் எதிரெதிரே இரண்டு புடைப்புச் சிற்பங்கள் உள்ளன. அவை இக்கோயிலைக் கட்டிய சுந்தரபாண்டிய மன்னனும் அவரது மனைவியும் எனக் கூறப்படுகிறது. மகா மண்டபத்தில் நடராஜர் சிவகாமி அம்மையின் ஐம்பொன்சிலைகள் காட்சியளிக்கின்றன. ராமர் சீதை திருவுருவங்களுக்கு வைகுண்ட ஏகாதசி மற்றும் ராம நவமியன்று தங்கக் கவசம் சாத்தி, சிறப்பு அலங்காரத்தில் பூஜைகள் நடைபெற்று வருகின்றன. சிற்பக் கலை நயத்தையும், கலை நுட்பத்தையும் பிரதிபலிக்கின்ற அம்சங்கள் இம் மண்டபத்தில் நிறைய இடங்களில் காணப்படுகின்றன. கோயிலுக்கு எதிரே உள்ள மேல் விதானத்தில் தாமரை மலருடன் கூடிய பன்னிரண்டு ராசி சிற்பங்களைக் காணலாம். ஒரே கல்லில் செதுக்கப்பட்ட யாழியின் சிற்பம் அழகு வாய்ந்தது. இதன் வாயில் தொங்கும் மூன்று வளையங்கள் ஒன்றுடன் ஒன்று பிணைந்திருப்பது ஆச்சரியப்பட வைக்கிறது. சிவ சன்னதியின் சுற்றில் தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர் மற்றும் துர்க்கை ஆகியோர் அருள்பாலிக்கின்றனர். சண்டிகேஸ்வரர், விநாயகப் பெருமான், பைரவர் சன்னதிகளும் உள்ளன. பொள்ளாச்சி முருகன் மும்மணிக் கோவை, கந்தன் பிள்ளைத் தமிழ், பொள்ளாச்சி சுப்பிரமணியர் இரட்டை மணிமாலை ஆகிய நூல்கள் இம்முருகன் புகழ்பாடும் பாடல்களைக் கொண்டவையாகும்.

அருள்மிகு சிவசுப்ரமணியர் திருக்கோவில் , மேற்கு சைதாப்பேட்டை



கோவில் பெயர் : அருள்மிகு  சிவசுப்ரமணியர்  திருக்கோவில் 

முருகன் பெயர்  : சிவசுப்ரமணியசுவாமி

கோவில் திறக்கும் நேரம் :  காலை 8 மணி முதல் 12 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை. 

முகவரி: 
அருள்மிகு  சிவசுப்ரமணியர்  திருக்கோவில் 
மேற்கு சைதாப்பேட்டை, சென்னை,

கோவில் சிறப்பு : 

* சுமார் 600 ஆண்டுகளுக்கு முன் செங்குந்தர் சமூகத்தவரால் அமைக்கப்பட்ட ஆலயம் இது என்கிறார்கள். அன்று தொட்டு இன்று வரை அவர்களாலேயே பராமரிக்கப்பட்டு வருவதால், இந்தப் பகுதிக்கு செங்குந்தர் தோட்டம் என்று பெயர் வந்ததாம். துவக்கத்தில் முருகப்பெருமான் சன்னதியுடன் மட்டுமே திகழ்ந்த ஆலயம். பிற்காலத்தில் பெரிய ஆலயமாக விளங்குகிறது.

* இங்கு காசி விஸ்வநாதர், பைரவர், செவ்வாய் ஆகியோர் தனிச்சன்னிதியில் அருள்புரிகின்றனர்

* பிரார்த்தனை பக்தர்கள் தங்களது வீடு,நிலப் பிரச்சனைகள் நீங்க, சகோதர பகை நீங்க, திருமணத் தடைகள் நீங்க வழிபட்டு செல்கின்றனர். நேர்த்திக்கடன்: பிரார்த்தனை நிறைவேறிய பக்தர்கள் உப்பு மிளகு காணிக்கை செலுத்தியும், வெள்ளி செவ்வாய்க்கிழமைகளில் அன்னதானம் செய்தும், அங்காரகனுக்கு சிவப்பு நிற வஸ்திரம் சார்த்தியும் நேர்த்திக்கடன் செலுத்துகிறார்கள். தலபெருமை: சுமார் 600 ஆண்டுகளுக்கு முன் செங்குந்தர் சமூகத்தவரால் அமைக்கப்பட்ட ஆலயம் இது என்கிறார்கள். அன்று தொட்டு இன்று வரை அவர்களாலேயே பராமரிக்கப்பட்டு வருவதால், இந்தப் பகுதிக்கு செங்குந்தர் தோட்டம் என்று பெயர் வந்ததாம். துவக்கத்தில் முருகப்பெருமான் சன்னதியுடன் மட்டுமே திகழ்ந்த ஆலயம். பிற்காலத்தில் பெரிய ஆலயமாக விளங்குகிறது.