ஞாயிறு, 30 அக்டோபர், 2016

அருள்மிகு ஓதிமலையாண்டவர் திருக்கோவில்

கோவில் பெயர் : அருள்மிகு ஓதிமலையாண்டவர்  திருக்கோவில்

முருகன் பெயர்  : ஓதிமலையாண்டவர்

கோவில் திறக்கும் நேரம் :  திங்கள், வெள்ளி, சஷ்டி, கிருத்திகை, அமாவாசை ஆகிய நாட்களில் காலை 11 - மாலை 6 மணி வரையில் சுவாமியை தரிசிக்கலாம். இதுதவிர மார்கழி மாதம் மற்றும் முருகனுக்கான விசேஷ நாட்களில் நடை திறந்திருக்கும். பிற நேரங்களில் செல்ல விரும்புவோர் முன்னதாக போனில் தொடர்பு கொண்டுவிட்டுச் செல்ல வேண்டும்.

முகவரி :   அருள்மிகு ஓதிமலையாண்டவர்  திருக்கோவில்
04254 - 287 418, 98659 70586

கோவில் சிறப்பு :

* ஐந்து முக முருகன், போகர் என்ற சித்தர் யாகம் செய்த இடத்தில் உள்ள மணல், தற்போதும் வெண்ணிறமாக இருக்கிறது. விசேஷ காலங்களில் இதையே பிரசாதமாக கொடுக்கின்றனர்.

* வெண்மணல் பிரசாதம்: சித்தர்களில் ஒருவரான போகர், முருகனைத் தரிசிக்க பழநிக்குச் சென்றார். அப்போது அவருக்கு சரியாக வழி தெரியவில்லை. வழியில் இத்தலத்தில் தங்கிய அவர் முருகனை வேண்டி, யாகம் நடத்தினார். அப்போது இத்தலத்து முருகன், அவருக்கு வழிகாட்டினார். வழிகாட்டிய முருகன் இத்தலத்திலிருந்து சற்று தூரத்திலுள்ள குமாரபாளையம் நாகநாதேஸ்வரர் கோயிலில் ஒரு முகத்துடன் காட்சி தருகிறார். ஆறு முகங்களுடன் உள்ள முருகன், போகருக்கு வழிகாட்ட ஒரு முகத்துடன் சென்றதால், ஓதிமலையில் ஐந்து முகங்களுடனும், இத்தலத்தில் ஒரு முகத்துடனும் இருப்பதாக சொல்கிறார்கள். தலவிநாயகர், அனுக்கை விநாயகர் என்றழைக்கப்படுகிறார்.

* பிரார்த்தனை இத்தலத்தில் பக்தர்கள் தாங்கள் எந்த செயலையும் துவங்கும் முன்பு, முருகனிடம் பூ வைத்து உத்தரவு கேட்டு அதன்பின்பே செயல்படுகின்றனர். இதை, "வரம் கேட்டல்' என்கிறார்கள். கல்வி, கலைகளில் சிறப்பிடம் பெற, தவறுக்கு மன்னிப்பு கிடைக்க இவரிடம் வேண்டிக்கொள்கிறார்கள். நேர்த்திக்கடன்: சுவாமிக்கு பாலபிஷேகம், சந்தனக்காப்பு செய்து வஸ்திரம் அணிவித்து நேர்த்திக்கடன் செலுத்தலாம். தலபெருமை: அம்பிகை இல்லாத சிவத்தலம்: படைப்புத்தொழில் செய்தபோது இருந்த அமைப்பில் இங்கு முருகன் ஐந்து முகம், 8 கரங்களில் ஆயுதங்களுடன் காட்சி தருகிறார். முருகன், சிவ அம்சம் என்பதால் அவரைப்போல ஐந்து தலைகளுடன் இருப்பதாகவும் சொல்கிறார்கள். இத்தகைய அமைப்பை காண்பது அபூர்வம். இந்த அமைப்பிலுள்ள முருகனை, "கவுஞ்சவேதமூர்த்தி' என்று அழைக்கிறார்கள். கல்வி, கலைகளில் சிறந்து திகழ இவரிடம் வேண்டிக்கொள்கிறார்கள். மலையடிவாரத்தில் சுயம்பு விநாயகர் இருக்கிறார். இவரை வணங்கிவிட்டே முருகனை தரிசிக்க வேண்டும் என்பது ஐதீகம். மலைக்கோயில் சோமாஸ்கந்த அமைப்பில் அமைக்கப்பட்டுள்ளது. முருகனுக்கு வலப்புறத்தில் காசிவிஸ்வநாதர், இடப்புறம் காசி விசாலாட்சி தனித்தனி சன்னதிகளில் காட்சி தருகின்றனர். இடும்பன், சப்தகன்னியருக்கும் சன்னதி இருக்கிறது. முருகனிடம் பிரம்மவை விடுவிக்கும்படி பரிந்துரைத்த சிவபெருமான், கைலாசநாதராக மலையடிவாரத்தில் தனிக்கோயிலில் இருக்கிறார். முருகனை சந்தித்தபோது, சிவபெருமான் மட்டும் தனித்து வந்தார். உடன் அம்பிகை வரவில்லை. எனவே இக்கோயிலில் அம்பிகை சன்னதி கிடையாது. பிரம்மாவை முருகன், இரும்பு அறையில் சிறைப்படுத்தியதால் இவ்வூர் "இரும்பறை' என்று அழைக்கப்படுகிறது.

முந்தைய கோவில்
அடுத்த கோவில்

0 Comments: