செவ்வாய், 1 நவம்பர், 2016

அருள்மிகு வெற்றி வேலாயுதசுவாமி திருக்கோவில்,ஊத்துக்குளி

கோவில் பெயர் : அருள்மிகு வெற்றி வேலாயுதசுவாமி திருக்கோவில்

முருகன் பெயர்  : வெற்றி வேலாயுதன்

கோவில் திறக்கும் நேரம் :   காலை 6 மணி முதல் 11 மணி வரை மாலை 5 மணி 8 முதல் இரவு மணி வரை. 

முகவரி : அருள்மிகு வெற்றி வேலாயுதசுவாமி திருக்கோவில்,
ஊத்துக்குளி , திருப்பூர் - 638 751
தொலைபேசி எண்: 04294-262052

கோவில் சிறப்பு : 

பிரார்த்தனை திருமணத்தில் தடை உள்ளவர்கள், பிரிந்த தம்பதியினர் இங்கு பிரார்த்தனை செய்கின்றனர். நேர்த்திக்கடன்: முருகனுக்கு பால் அபிஷேகம் செய்து புது வஸ்திரம் சாற்றி வழிபடுகின்றனர். தலபெருமை: குன்று இருக்கும் இடமெல்லாம் குமரன் இருப்பான்' என்பதற்கேற்ப ஈரோடு மாவட்டத்தில் உள்ள ஊத்துக்குளி கதித்தமலையில் முருகப்பெருமான் அருள்பாலித்து வருகிறார். அருணகிரிநாதரால் பாடல் பெற்றதும், அகத்தியர் பூஜித்த பெருமை பெற்றதுமான இத்தலம் சிறந்த பிரார்த்தனை தலமாக விளங்குகிறது. கோயிலில் மூலவரான வெற்றி வேலாயுதசுவாமி வள்ளி தெய்வானை இல்லாமல் தனியாக நின்ற கோலத்தில் அருள் பாலிக்கிறார். வள்ளி தெய்வானை தனி சன்னதிக்கான காரணம்: சூரபத்மனை வதம் செய்த பிறகு முருகன் தனிமையில் இருந்தார். அவரை மணம் முடிக்க விரும்பிய இந்தப் பெண்கள் இம்மலைக்கு வந்து முருகன் தங்களை ஆட்கொள் ளுமாறு வேண்டினர். அவரது அருளாசியின்படி இந்திரனின் மகளாக தெய்வானையும், நம் பிராஜனின் வளர்ப்பு மகளாக வள்ளியும் அவதரித்தனர். திருமணத்துக்கு முன்னதான நிலை என்பதால், இவர்களுக்கு தனி சன்னதி தரப்பட்டுள்ளது. மற்றொரு காரணமும் சொல்லப்படுகிறது. வள்ளி, தெய்வானை, வேல் ஆகியன முறையே இச்சாசக்தி, கிரியாசக்தி, ஞானசக்தி ஆகியவை. ஆசை, செயல், அறிவு என் னும் மூன்று சக்திகளை குறிக் கின்றன. இவை மூன்றும் பரப் பிரம்மமாகிய முருகனுக்குள் அடங்கியுள்ளது. பெரும்பாலான முருகன் கோயில்களில் இச்சா சக்தியும், கிரியா சக்தியும் அவருக்கு இருபக்கம் வைக்கப்பட்டு, ஞான சக்தியான வேல் மட்டும் அவரது மார்பின் மேல் வைக்கப்படும். ஞானசக்தி தான் இம் மூன்றில் முக்கியமானது. இச்சையும், கிரியையும் இருந்தால் தான் ஞானம் பெற முடியும். ஆனால், அபூர்வ சக்தி படைத்த முருகன், இவ்விரண்டும் இல்லாமலே ஞானசக்தி பெற்றவர் என்பதையும் இது காட்டுகிறது.
முந்தைய கோவில்
அடுத்த கோவில்

0 Comments: