கோவில் பெயர் : அருள்மிகு சுப்பிரமணிய திருக்கோவில்
முருகன் பெயர் : சுப்பிரமணிய சுவாமி
கோவில் திறக்கும் நேரம் : காலை 7 மணி 10 முதல் மணி வரை,
மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை.
முகவரி : அருள்மிகு சுப்பிரமணிய திருக்கோவில்
பொள்ளாச்சி - 642 001.
Phone No : 04259 229054
Phone No (E.O) : 99769 50644
கோவில் சிறப்பு :
* மூலவர் முருகன், திருவாச்சி மற்றும் மயில் சிலைகள் ஒரே கல்லில் ஆனவை என்பது சிறப்பாகும். இக்கோயில் சோழர்களால் கட்டப்பட்டது.
* பிரார்த்தனை துர்க்கைக்கு செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் ராகுகால பூஜை நடத்தினால் தடைப்பட்ட திருமணங்கள் நடந்தேறும் என பக்தர்கள் நம்புகின்றனர். நேர்த்திக்கடன்: சுவாமிக்கு பால்குடம் எடுத்தும், அலகு குத்தியும் அபிஷேகம் செய்தும் நேர்த்திகடன் செலுத்துகின்றனர். தலபெருமை: கோயில் கிழக்கு நோக்கி ஒரு சுற்றுப் பிராகாரத்துடன் அமைந்துள்ளது. சிவன் சன்னதி முன்பு ராஜ கோபுரமும், முருகன் கோயில் முன்பு சிறிய முகப்பும் உள்ளன. கருவறையில் முருகப் பெருமான் வள்ளி தேவசேனா சமேதராய் அருள்பாலிக்கின்றார். முருகன் மயில் மீது ஒரு முகத்துடன் நான்கு கரங்களுடன் உள்ளார். சுகாசனத்தில் அமர்ந்த கோலத்தில் பின் கைகளில் சக்தி ஆயுதமும், வச்சிரமும் இருக்க, முன் கைகளில் அபய வரத முத்திரை காட்டி காட்சி தருகிறார். மயிலின் தலைப்பகுதி இடப்புறமாக இருப்பதால் இது தேவ மயில் எனப்படும். திருவாச்சி, மயில் மற்றும் முருகன் சிலைகள் ஒரே கல்லில் ஆனவை என்பது சிறப்பாகும். தேவியர் இருவர் கரங்களில் ஒரு கரத்தில் மலர் தாங்கி மற்றொரு கரம் கை கத்ய வலம்பித முத்திரை காட்டிட உள்ளனர். கருவறையின் கல்நிலவுப் பகுதியில் எதிரெதிரே இரண்டு புடைப்புச் சிற்பங்கள் உள்ளன. அவை இக்கோயிலைக் கட்டிய சுந்தரபாண்டிய மன்னனும் அவரது மனைவியும் எனக் கூறப்படுகிறது. மகா மண்டபத்தில் நடராஜர் சிவகாமி அம்மையின் ஐம்பொன்சிலைகள் காட்சியளிக்கின்றன. ராமர் சீதை திருவுருவங்களுக்கு வைகுண்ட ஏகாதசி மற்றும் ராம நவமியன்று தங்கக் கவசம் சாத்தி, சிறப்பு அலங்காரத்தில் பூஜைகள் நடைபெற்று வருகின்றன. சிற்பக் கலை நயத்தையும், கலை நுட்பத்தையும் பிரதிபலிக்கின்ற அம்சங்கள் இம் மண்டபத்தில் நிறைய இடங்களில் காணப்படுகின்றன. கோயிலுக்கு எதிரே உள்ள மேல் விதானத்தில் தாமரை மலருடன் கூடிய பன்னிரண்டு ராசி சிற்பங்களைக் காணலாம். ஒரே கல்லில் செதுக்கப்பட்ட யாழியின் சிற்பம் அழகு வாய்ந்தது. இதன் வாயில் தொங்கும் மூன்று வளையங்கள் ஒன்றுடன் ஒன்று பிணைந்திருப்பது ஆச்சரியப்பட வைக்கிறது. சிவ சன்னதியின் சுற்றில் தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர் மற்றும் துர்க்கை ஆகியோர் அருள்பாலிக்கின்றனர். சண்டிகேஸ்வரர், விநாயகப் பெருமான், பைரவர் சன்னதிகளும் உள்ளன. பொள்ளாச்சி முருகன் மும்மணிக் கோவை, கந்தன் பிள்ளைத் தமிழ், பொள்ளாச்சி சுப்பிரமணியர் இரட்டை மணிமாலை ஆகிய நூல்கள் இம்முருகன் புகழ்பாடும் பாடல்களைக் கொண்டவையாகும்.
0 Comments: