ஞாயிறு, 26 ஜூன், 2016

அருள்மிகு கோடீஸ்வரர், கைலாசநாதர் திருக்கோவில்கோவில் பெயர் : அருள்மிகு கோடீஸ்வரர், கைலாசநாதர் திருக்கோவில்

சிவனின் பெயர்  : கோடீஸ்வரர், கைலாசநாதர்

அம்மனின் பெயர் : பந்தாடு நாயகி

தல விருட்சம் : வில்வம்

கோவில் திறக்கும் நேரம் :    காலை 6.மணி முதல் 12. மணி வரை, 
                               மாலை 3 மணி முதல் இரவு  8. மணி வரை

முகவரி : அருள்மிகு கோடீஸ்வரர், கைலாசநாதர் திருக்கோவில்கொட்டையூர்-612 002, 
தஞ்சாவூர். Ph:0435 245 4421

கோவில் சிறப்பு :

* 1000-2000 வருடங்களுக்கு முன் பழமையானது.

* இக்கோயில் சோழர்களால் கட்டப்பட்டது

* இது 43 வது தேவாரத்தலம் ஆகும்.

.* சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.
.
* விசேஷமான நவக்கிரக மண்டபம்: இத்தலத்தில் வாகனங்களில் எழுந்தருளிய நவக்கிரகங்களை காணலாம். எல்லா கிரகங்களும் மிகச்சிறப்பான முறையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. இவற்றைக்காணவே கண்கோடி வேண்டும். இதுபோன்ற நவக்கிரக சன்னதிகள் தமிழகத்தில் விரல் விட்டு எண்ணும் அளவிலேயே உள்ளன.

* தோஷ தொல்லை, அழகிய வடிவம் பெற இத்தலத்தில் பிரார்த்திக்கலாம்.
முந்தைய கோவில்
அடுத்த கோவில்

0 Comments: