புதன், 29 ஜூன், 2016

அருள்மிகு கும்பேஸ்வரர் திருக்கோவில்


கோவில் பெயர் : அருள்மிகு கும்பேஸ்வரர் திருக்கோவில்

சிவனின் பெயர்  : கும்பேசுவரர் (அமுதேசுவரர், குழகர்)

அம்மனின் பெயர் : மங்களாம்பிகை

தல விருட்சம்   :   வன்னி

கோவில் திறக்கும் நேரம் :   காலை  6 மணி முதல் 12.30 மணி வரை, 
மாலை 4 மணி முதல் இரவு 9.30 மணி வரை. 

முகவரி : அருள்மிகு கும்பேசுவரர் திருக்கோவில், 
கும்பகோணம்- 612 001,தஞ்சாவூர் மாவட்டம்.Ph:0435- 242 0276.

கோவில் சிறப்பு : 

* 1000-2000 வருடங்களுக்கு முன் பழமையானது.

* இக்கோயில் சோழர்களால் கட்டப்பட்டது

* இது 89 வது தேவாரத்தலம் ஆகும்.

* மலையாள ஆண்டின் (கொல்லம்) துவக்க மாதமாக சிம்மம் எனப்படும் ஆவணி உள்ளது. இம்மாதத்தில் சூரியனின் நிலையைப் பொறுத்தே ஆண்டு முழுவதும் சீதோஷ்ண நிலை அமையும். எனவே, சூரிய பகவானை மகிழ்ச்சிப்படுத்தும் பொருட்டும், பயிர்களை அழிக்கும் எலிகள் முதலான ஜந்துக்களிடமிருந்து பாதுகாப்பு பெற நாகராஜாவை வேண்டியும் ஆவணி ஞாயிற்றுக் கிழமைகளில் விரதம் இருப்பது தொன்றுதொட்டு இருந்து வரும் வழக்கம்.

* உலகம் அழிந்த போது, உயிர்களை மீண்டும் இவ்வுலகில் படைக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் சிவபெருமான், பிரம்மா மூலம் படைப்புக்கலன்களை ஒரு கும்பத்தில் வைத்து காப்பாற்றினார். இதனால் "கும்பேஸ்வரர்' என்று பெயர்பெற்றார். கும்பகோணத்தில் அருள்பாலிக்கும் இவரது தலத்திலும் ஆவணி ஞாயிறன்று சிறப்பு பூஜைகள் நடத்தப்படும்.

* கல்வியில் சிறந்து விளங்க நினைப்பவர்கள், தொழில் துவங்குபவர்கள், திருமணத்தடை உள்ளவர்கள், குழந்தை பாக்கியம் வேண்டுபவர்கள், குபேர வாழ்வு விரும்புபவர்கள் மங்கள நாயகிக்கு ஆவணி ஞாயிற்றுக்கிழமைகளில் செம்பருத்தி பூவால் அலங்காரம் செய்து அர்ச்சனை செய்தால் வேண்டியது கிடைக்கும் என்பது நம்பிக்கை.

முந்தைய கோவில்
அடுத்த கோவில்

0 Comments: