வெள்ளி, 1 ஜூலை, 2016

அருள்மிகு மதுவனேஸ்வரர் திருக்கோவில்(நன்னிலம்)


கோவில் பெயர்   : அருள்மிகு மதுவனேஸ்வரர் திருக்கோவில்

சிவனின் பெயர்   :  மதுவனேஸ்வரர் 

அம்மனின் பெயர் :  மதுவனேஸ்வரி

தல விருட்சம்     :   வில்வம்

கோவில் திறக்கும் நேரம் :       காலை 7 மணி முதல் 12 மணி வரை, 
                                                                    மாலை  4 மணி முதல் இரவு 8 மணி வரை.       

முகவரி : அருள்மிகு மதுவனேஸ்வரர் திருக்கோவில்,
 நன்னிலம்- 610 105. திருவாரூர் மாவட்டம்.
Ph: 94426 82346, 9432 09771.
கோவில் சிறப்பு :

* 1000-2000 வருடங்களுக்கு முன் பழமையானது.

* இது 134 வது தேவாரத்தலம் ஆகும்.

*   இறைவன் சுயம்பு லிங்கமாக அருள்பாலிக்கிறார். சூரியனின் அருகில் பைரவர் அருள்பாலிப்பதும், அனைத்து நவகிரகங்களும் சூரியனை பார்த்திருப்பதும், சூரியனும் குருவும் நேருக்கு நேர் பார்த்திருப்பதும், சனி பகவான் தனி சன்னதியில் அருள் பாலிப்பதும், சித்ர குப்தர் தனி சன்னதியில் அருள்பாலிப்பதும் தலத்தின் சிறப்பம்சமாகும்.

* கோயில் உள்ளே அமைந்துள்ள சிறிய மலையின் மீது உள்ள பிரகாரத்தில் நர்த்தன கணபதி, சோமாஸ்கந்தர், தெட்சிணாமூர்த்தி, அண்ணாமலையார், பிரம்மா, துர்க்கை ஆகிய தெய்வங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. மலையின் கீழ் உள்ள பிரகாரத்தில் சித்தி விநாயகர், சுப்பிரமணியர், மகாலட்சுமி, சண்டிகேஸ்வரர், அகஸ்தீஸ்வரர், பிரம்மபுரீஸ்வரர், சனீஸ்வரர், பைரவர், சூரியன், நவகிரகங்கள் ஆகியவற்றிற்கு தனி சன்னதிகள் உள்ளன. மூலஸ்தானத்தின் அருகில் நடராஜருக்கு தனி சன்னதி உள்ளது.

* இங்குள்ள தீர்த்தத்தில் மாசி மாதம் நீராடி இறைவனை வழிபடுவோர் சகல நலன்களையும் பெறுவர் என்றும், ஏகாதசி மற்றும் பிரதோஷ காலத்தில் வழிபாடு செய்பவர்கள் மோட்சம் அடைவர் என்றும் கூறப்படுகிறது.
முந்தைய கோவில்
அடுத்த கோவில்

0 Comments: