வெள்ளி, 24 ஜூன், 2016

அருள்மிகு பல்லவனேஸ்வரர் திருக்கோவில்




கோவில் பெயர் :  அருள்மிகு பல்லவனேஸ்வரர் திருக்கோவில்

சிவனின் பெயர் :   பல்லவனேஸ்வரர்

அம்மனின் பெயர் : சவுந்தர்யநாயகி

தல விருட்சம் :     மல்லிகை

கோவில் திறக்கும் நேரம் :  காலை 6.30 மணி முதல் 12 மணி வரை , 
                               மாலை  4.30 மணி முதல் இரவு 7.30 மணி வரை

முகவரி : அருள்மிகு பல்லவனேஸ்வரர் திருக்கோவில் (பல்லவனீச்சுரம்) - காவிரிப்பூம்பட்டினம், பூம்புகார் - 609 105. சீர்காழி தாலுகா, 
நாகப்பட்டினம் மாவட்டம். Ph:0 94437 19193.


கோவில் சிறப்பு :


*  இறைவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.

* 1000-2000 வருடங்களுக்கு முன் பழமையானது.

* இது 10 வது தேவாரத்தலம் ஆகும்.

* காலவ மகரிஷி இத்தலத்தில் சிவனை வழிபட்டுள்ளார்.

* பட்டினத்தார் அவதார தலம்.

* இங்கு தலவிநாயகராக அனுக்கை விநாயகர் அருள்புரிகிறார்.

* அறிவான குழந்தைகள் பிறக்கவும், பொருட்கள் மீதான ஆசை குறையவும் இங்குள்ள பல்லவனநாதரிடம் வேண்டிக்கொள்கின்றனர்.

* பட்டினத்தார் தனிச்சன்னதியில் வடக்கு நோக்கியபடி காட்சி தருகிறார். இவரது சன்னதி விமானத்தில் பட்டினத்தார், மனைவி, அவரது தாய் மற்றும் மகனாக வளர்ந்த சிவன் ஆகியோரது சிற்பங்களும் இருக்கிறது. இங்கு சிவனுக்கு பிரம்மோற்ஸவம் கிடையாது. பட்டினத்தாருக்காக விழா எடுக்கப்படுகிறது. இதை "அடியார் உற்சவம்' என்கிறார்கள். கொடிமரம் கிடையாது. ஆடி மாதத்தில் பட்டினத்தார் திருவிழா 12 நாட்கள் நடக்கிறது. விழாவின் 10ம் நாளில் பட்டினத்தாருக்கு, சிவன் மோட்சம் தரும் நிகழ்ச்சி பெரியளவில் நடக்கும். மருதவாணராக பிறந்த சிவன், அவரை வளர்த்த சிவசர்மா சுசீலை தம்பதியர், பட்டினத்தார், அவரது மனைவி சிவகலை, பட்டினத்தாரின் தாய் ஞானகலாம்பிகை, பட்டினத்தாரின் சீடர் பத்ரகிரியார், நாயடியார் மற்றும் முருகனை மடியில் அமர்த்தியபடி குகாம்பிகை ஆகியோர் இங்கு உற்சவ மூர்த்திகளாக இருக்கின்றனர்.

முந்தைய கோவில்
அடுத்த கோவில்

0 Comments: