வெள்ளி, 1 ஜூலை, 2016

அருள்மிகு ராமநாதர் திருக்கோவில்(ராமநாதீச்சரம்)


கோவில் பெயர்   :  அருள்மிகு ராமநாதர் திருக்கோவில்

சிவனின் பெயர்   :  ராமநாதசுவாமி

அம்மனின் பெயர் :  சரிவார்குழலி

தல விருட்சம்     :  மகிழம், செண்பகம்

கோவில் திறக்கும் நேரம் :   காலை 8 மணி முதல் 11 மணி வரை, 
                                              மாலை  5 மணி முதல் இரவு 7.30 மணி வரை.
                             (கோவில் முன்னரே போனில் தொடர்பு கொண்டுவிட்டுச் செல்வது நல்லது.)

முகவரி : அருள்மிகு ராமநாதசுவாமி திருக்கோவில்
ராமநாதீச்சரம், திருக்கண்ணபுரம்- 609 704. திருவாரூர் மாவட்டம்
.Ph 4366 - 292 300, 291 257, 94431 13025

கோவில் சிறப்பு : 

* 1000-2000 வருடங்களுக்கு முன் பழமையானது.

* இது 140 வது தேவாரத்தலம் ஆகும்.

* இத்தல இறைவன் சுயம்பு லிங்கமாக அருள்பாலிக்கிறார்.சுவாமிக்கு தீபாராதனை செய்யும்போது லிங்கத்திருமேனியில் ஜோதி வடிவம் தெரிவது விசேஷம்.

* பிரகாரத்தில் காசி பைரவருக்கு அருகில் வணங்கிய கோலத்தில் அகத்தியர் காட்சி தருகிறார். இந்த பைரவரை அகத்தியர்பிரதிஷ்டை செய்து வழிபட்டதாக சொல்கிறார்கள்.

* செய்த தவறுக்கு மன்னிப்பு வேண்டுபவர்களும், ஜாதகத்தில் தோஷம் உள்ளவர்களும் சிவனுக்கு ருத்ர ஹோமம் மற்றும் விசேஷ பூஜை செய்து வேண்டிக்கொள்கிறார்கள். அம்பாளிடம் வேண்டிக்கொள்ள சுகப்பிரசவம் ஆகும் என்பது நம்பிக்கை.

*  இத்தலத்திலிருந்து சற்று தூரத்தில் திருக்கண்ணபுரம் சவுரிராஜப்பெருமாள் கோயில் உள்ளது. 108 திவ்யதேசங்களில் இத்தலமும் ஒன்று. ராமநாதசுவாமியை தரிசிக்க செல்பவர்கள், சவுரிராஜரையும் வணங்கி திரும்பலாம். தல விநாயகரின் திருநாமம் அனுக்ஞை விநாயகர்.

முந்தைய கோவில்
அடுத்த கோவில்

0 Comments: