வெள்ளி, 1 ஜூலை, 2016

அருள்மிகு அமிர்தகலசநாதர் திருக்கோவில் (திருக்கலயநல்லூர்)


கோவில் பெயர்   : அருள்மிகு  அமிர்தகலசநாதர் திருக்கோவில்

சிவனின் பெயர்   :  அமிர்தகடேஸ்வரர், அமிர்தகலசநாதர்சிவபுரநாதர்

அம்மனின் பெயர் :   அமிர்தவல்லி

தல விருட்சம்     :   வன்னி 

கோவில் திறக்கும் நேரம் :   காலை 10 மணி முதல் 11 மணி வரை, 
                              மாலை  5 மணி முதல் இரவு 7 மணி வரை. 

முகவரி : அமிர்தகலசநாதர்(அமிர்தகடேஸ்வரர்) திருக்கோவில் சாக்கோட்டை (திருக்கலயநல்லூர்) - 612 401. கும்பகோணம் வட்டம். 
தஞ்சாவூர் மாவட்டம்.Ph:435-2414 453, 98653 06840,9788202923

கோவில் சிறப்பு : 

* 1000-2000 வருடங்களுக்கு முன் பழமையானது.

* இது 131 வது தேவாரத்தலம் ஆகும்.

* இறைவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.

* வேண்டியதை எல்லாம் கொடுக்கும் இறைவன்.

* கிழக்கு நோக்கிய சன்னதி, முன்புறம் மதிலும் வாயிலும் உள்ளன. அடுத்து மூன்றுநிலை கோபுரம், நாய்க்கர் காலச் செங்கல் மண்டபம் உள்ளது. இதன் வடக்கு பகுதியில் அம்பாள் கோயில் தெற்கு நோக்கியுள்ளது. மகாமண்டப வாயிலில் வடபால் சிறிய தண்டபாணியும் தென்பால் நர்த்தன விநாயகரும் உள்ளனர். முன் மண்டபத்தில் நந்தி பலி பீடம் உள்ளது.


முந்தைய கோவில்
அடுத்த கோவில்

0 Comments: