புதன், 29 ஜூன், 2016

அருள்மிகு தேனுபுரீஸ்வரர் திருக்கோவில்கோவில் பெயர் : அருள்மிகு தேனுபுரீஸ்வரர் திருக்கோவில்

சிவனின் பெயர்  :பட்டீசுவரர்

அம்மனின் பெயர்: பல்வளைநாயகி

தல விருட்சம்   :  வில்வம்

கோவில் திறக்கும் நேரம் :   காலை  6 மணி முதல் 11 மணி வரை, 
                                                  மாலை 4 மணி முதல் இரவு 8.30 மணி வரை. 

முகவரி : அருள்மிகு தேனுபுரீசுவரர் திருக்கோவில், திருப்பட்டீசுவரம், தஞ்சாவூர் மாவட்டம். Ph:0435- 2416976

கோவில் சிறப்பு : 

* 1000-2000 வருடங்களுக்கு முன் பழமையானது.

* இது 86 வது தேவாரத்தலம் ஆகும்.

* இறைவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.

 * ராகு கால நேரங்களிலும் முக்கியமாய் செவ்வாய், வெள்ளி, ஞாயிற்றுக்கிழமைகளிலும் அமாவாசை, பௌர்ணமி நாட்களிலும் அஷ்டமி, நவமி திதிகளிலும் வழிபடுகிறார்கள்.

* இத்தலத்து பைரவர் மிகவும் விசேசமானவர். சத்ரு தோசம், பிணிநீக்கம், விஷக்கடி, நாய்க்கடி ஆகியவற்றால் பாதிக்கப்பட்டவர்கள் பைரவரை வழிபட்டு பலன் அடைகிறார்கள்.

 * இத்தலத்து பட்டீசுவரனை வணங்குவோர்களுக்கு துயரம் நீங்கி மனஅமைதி கிடைக்கும். மேலும் வேலை வாய்ப்பு , தொழில் விருத்தி ,உத்தியோக உயர்வு, ஆகியவற்றுக்காகவும் இங்கு பிரார்த்தனை செய்தால் சுவாமி பக்தர்களது வேண்டுதல்களை நிச்சயம் நிறைவேற்றி கொடுப்பார்.

* அஷ்டபுஜங்களுடன் அருள் பாலிக்கும் இவ்வன்னையை விஷ்ணு துர்க்கை, துர்க்கா லட்சுமி எனவும் அழைப்பர். நவசக்தி நாயகி, நவரத்ன நாயகி, நவயோக நாயகி, நவகிரக நாயகி , நவராத்திரி எனவும் போற்றப்படுகிறாள்.

* இங்குள்ள துர்க்கை அம்மனை வழிபட்டால் ராகு கேது செவ்வாய் தோசங்கள் நீங்கும். திருமண பாக்கியம், குழந்தை பாக்கியம்
 ஆகியவை கிடைக்கப்பெறலாம்.

முந்தைய கோவில்
அடுத்த கோவில்

0 Comments: