வியாழன், 30 ஜூன், 2016

அருள்மிகு உத்தவேதீஸ்வரர் திருக்கோவில்.

கோவில் பெயர் : அருள்மிகு உத்தவேதீஸ்வரர்  திருக்கோவில்.

சிவனின் பெயர்  : உத்தவேதீஸ்வரர்

அம்மனின் பெயர் : அரும்பன்ன வனமுலைநாயகி

தல விருட்சம்   : உத்தாலமரம்

கோவில் திறக்கும் நேரம் :   காலை  6 மணி முதல் 12.30 மணி வரை, 
                                                       மாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை. 

முகவரி : அருள்மிகு அரும்பன்ன வனமுலைநாயகி உடனுறை உத்தவேதீஸ்வரர் திருக்கோவில், குத்தாலம் (திருத்துருத்தி)-609 801. நாகப்பட்டினம் மாவட்டம்.Ph:04364-235 225, 94878 83800

கோவில் சிறப்பு : 

* 1000-2000 வருடங்களுக்கு முன் பழமையானது.

* இது 100 வது தேவாரத்தலம் ஆகும்.

* இத்தல இறைவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.

* சிவபெருமான் இத்தலத்தில் திருமணம் செய்ததற்கு அடையாளமாக, தான் அணிந்து வந்த பாதுகைகளையும், கைலாயத்திலிருந்து தொடர்ந்து நிழல் தந்து வந்த உத்தால மரத்தையும் இங்கு விட்டு சென்றார். சிவனது பாதுகைகளை நாம் இப்போது சென்றாலும் தரிசிக்கலாம்.

* இங்கு பார்வதி, காளி ஆகியோரும், காசிபன் , ஆங்கீரசன், கவுதமன், மார்க்கண்டேயர், வசிஷ்டர், புலஸ்தியர், அகஸ்தியர் ஆகிய சப்த ரிஷிகளும் இத்தலத்தில் பேறு பெற்றுள்ளனர்.

 * உமையமையம்மை, அக்னி, வருணன், காளி, காமன், காசிபன், ஆங்கீரசன், கவுதமன், வசிட்டன், மார்கண்டன், புலத்தியன், அகத்தியன், சிவபக்தன், வித்துவன்மாலி, கதிரவன், உருத்திரசன்மன், பரதன், புண்டரீசன், ககோள முனிவர், புலகன், குச்சன், விக்ரமன், சுந்தரர், சதானந்தர், வச்சன், சோமசேகரன், தருமசன்மர், சுமதி, சௌதரிசன முனிவர் ஆகியோர் இறைவனை தரிசித்துள்ளனர். 

* திருமணத்தில் தடை உள்ளவர்கள் வழிபட வேண்டிய தலம். சரும நோய் தீர சுந்தர தீர்த்தத்தில் நீராடி வழிபாடு செய்கிறார்கள்.
முந்தைய கோவில்
அடுத்த கோவில்

0 Comments: