வியாழன், 30 ஜூன், 2016

அருள்மிகு வேதபுரீஸ்வரர் திருக்கோவில் (தேரழுந்தூர்)



கோவில் பெயர் : அருள்மிகு வேதபுரீஸ்வரர் திருக்கோவில் 

சிவனின் பெயர்  : வேதபுரீஸ்வரர்

அம்மனின் பெயர் : சௌந்தராம்பிகை

தல விருட்சம்   :  சந்தனம்

கோவில் திறக்கும் நேரம் :   காலை  6 மணி முதல் 11.30 மணி வரை, 
                                                    மாலை 5 மணி முதல் இரவு 8.30 மணி வரை. 

முகவரி : அருள்மிகு வேதபுரீஸ்வரர் திருக்கோவில், தேரழுந்தூர் -(Po)
நாகப்பட்டினம் மாவட்டம்- 609808. Ph: 04364-237 650.

கோவில் சிறப்பு : 

* 1000-2000 வருடங்களுக்கு முன் பழமையானது.

* இது 101 வது தேவாரத்தலம் ஆகும்.

* இறைவன் சுயம்புமூர்த்தியாக அருள்பாலிக்கிறார்

* ஞானசம்பந்தர் குழந்தையாக இந்த ஊருக்கு வந்தபோது இரண்டு திசையிலும் இரண்டு கோபுரங்கள் உயர்ந்து இருந்ததால் எது சிவன் கோயில் என்ற சந்தேகம் எழுந்தது. அப்போது இத்தலத்தில் இருந்த பிள்ளையார் "அதோ ஈஸ்வரன் கோயில்' என சுட்டிக்காட்டினார். எனவே இந்த பிள்ளையார் "ஞானசம்பந்த விநாயகர்' என அழைக்கப்படுகிறார். இத்தல இறைவனை அகத்தியர் வழிபட்டுள்ளார்.

* தன் அழகை பிறர் விரும்ப வேண்டும் என விரும்புபவர்கள் இந்த அன்னையிடம் பிரார்த்தனை செய்கின்றனர்.

* அதிசயத்தின் அடிப்படையில்: மாசி 23,24,25 தேதிகளில் மாலை 5.55 முதல் 6.05 வரை சூரிய பூஜை நடக்கிறது. இது மேற்கு பார்த்த சிவன் கோயில். இத்தலம் திருமணத் தடை நீக்கும் தலமாகும்
முந்தைய கோவில்
அடுத்த கோவில்

0 Comments: