வியாழன், 30 ஜூன், 2016

அருள்மிகு வீரட்டேஸ்வரர் திருக்கோவில்கோவில் பெயர் : அருள்மிகு வீரட்டேஸ்வரர் திருக்கோவில் 

சிவனின் பெயர்  : வீரட்டேஸ்வரர், தட்சபுரீசுவரர்

அம்மனின் பெயர் : இளம்கொம்பனையாள் (பாலாம்பிகா)

தல விருட்சம்   : பலா மரம்

கோவில் திறக்கும் நேரம் :   காலை  6 மணி முதல் 12 மணி வரை,
                                                     மாலை 5  மணி முதல் இரவு 7 மணி வரை. 

முகவரி : அருள்மிகு வீரட்டேஸ்வரர் திருக்கோவில், கீழப்பரசலூர், திருப்பறியலூர் - 609 309. நாகப்பட்டினம் மாவட்டம். 

கோவில் சிறப்பு : 

* 1000-2000 வருடங்களுக்கு முன் பழமையானது.

* இது 104 வது தேவாரத்தலம் ஆகும்.

* இறைவன் சுயம்புமூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.

* சிவபெருமானின் அட்ட வீரட்டத்தலங்களில் இத்தலம் நான்காவது தலம் ஆகும்.

* உள் பிராகாரத்தில் விநாயகர், விசுவநாதர், பைரவர், சூரியன் சன்னதிகள் உள்ளன. கோஷ்டமூர்த்தங்களாகத் துர்க்கை, பிரம்மா, லிங்கோற்பவர், தட்சிணாமூர்த்தி, நர்த்தனவிநாயகர் ஆகிய மூர்த்தங்கள் உள்ளன. சுப்பிரமணியர் திருவுருவம் மயிலின் மீது ஒரு காலை வைத்து நின்றபடி உள்ளது. வெளிமுன் மண்டபத்தில் அம்பாள் சந்நிதி தெற்கு நோக்கியுள்ளது. பழமையான கோயில். மேற்கு நோக்கியது. ராஜகோபுரம் இல்லை. முன்னால் இரும்புப்பந்தல் போடப்பட்டுள்ளது. கோயில் எதிரில் சாலையில் (மறுபுறத்தில்) விநாயகர் கோயில் உள்ளது. கொடிமரம் இல்லை. நந்தி, பலிபீடம் உள்ளன. கொடிமர விநாயகர் உள்ளார். இங்கிருந்து பார்த்தாலே மூலவர் சன்னதிதெரிகின்றது. இத்தல விநாயகர் சித்தி விநாயகர் என்ற திருநாமத்துடன் அருள்பாலிக்கிறார். இங்கு இறைவனுக்கு தயிர்சாதம், சுத்தன்னம் நைவேத்யம் செய்கின்றனர்.

* சிவபெருமான் வீரம் புரிந்த தலம் என்பதால் அனைத்து வித தோஷ நிவர்த்திக்கும் இங்குவந்து வழிபடுதல் சிறப்பு.
முந்தைய கோவில்
அடுத்த கோவில்

0 Comments: