வியாழன், 30 ஜூன், 2016

அருள்மிகு வலம்புரநாதர் திருக்கோவில்



கோவில் பெயர் : அருள்மிகு வலம்புரநாதர்   திருக்கோவில் 

சிவனின் பெயர்  : வலம்புர நாதர்

அம்மனின் பெயர் : வடுவகிர்கண்ணி, பத்மநாயகி

தல விருட்சம்   : ஆண்பனை

கோவில் திறக்கும் நேரம் :   காலை  6 மணி முதல் 12 மணி வரை, 
மாலை 6  மணி முதல் இரவு 8.30 மணி வரை. 

முகவரி :  அருள்மிகு வலம்புரநாதர் திருக்கோவில், மேலப்பெரும்பள்ளம், மேலையூர் - Po (திருவலம்புரம்), தரங்கம்பாடி தாலுகா, நாகப்பட்டினம் மாவட்டம்.  - 609107. Ph : 04364 - 200 890, 200 685

கோவில் சிறப்பு : 

* 1000-2000 வருடங்களுக்கு முன் பழமையானது.

* சோழனால் இத்தலம் கட்டப்பட்டது.

* இது 107 வது தேவாரத்தலம் ஆகும்.

* இறைவன் சுயம்புமூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.

* இத்தல விநாயகர் வல்லப விநாயகர் எனப்படுகிறார். மாடக்கோயில் எதிரில் உள்ள தீர்த்தக்கரையில் விநாயகர் வீற்றிருக்கிறார். இங்கு தலப்பதிகக் கல்வெட்டு உள்ளது.

* புத்திர பாக்கியம் இல்லாதவர்கள், தோல்வியாதி உள்ளவர்கள், ஸ்ரீஹத்தி(பெண்ணால் ஏற்படக்கூடியது) தோஷம் உள்ளவர்கள், திருமணத்தடை உள்ளவர்கள், சப்த நாகதோஷம் உள்ளவர்கள் அவை நீங்க இங்கு வேண்டிக்கொள்கிறார்கள்.
முந்தைய கோவில்
அடுத்த கோவில்

0 Comments: