வியாழன், 23 ஜூன், 2016

மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில்


கோவில் பெயர் : அருள்மிகு கபாலீஸ்வரர் திருக்கோவில்.

சிவனின் பெயர் : கபாலீஸ்வரர்

அம்மனின் பெயர் : கற்பகாம்பாள்

தல விருட்சம் :  புன்னை மரம்.

கோவில் திறக்கும் நேரம் :  காலை 5 மணி முதல் 12.30 மணி வரை , 
                                                        மாலை 4 மணி முதல் இரவு 9.30 மணி வரை

முகவரி :                                                    நிர்வாக அதிகாரி,
                                                            அருள்மிகு கபாலீஸ்வரர் திருக்கோயில்,
                                                                   மயிலாப்பூர்,  சென்னை - 600 004.
                                                                   தொலைபேசி எண் : +91-44-24641670

 
இக்கோவில் 1000 முதல் 2000 வருடங்களுக்கு  பழமையானது.

 

 கோவில் சிறப்பு :

* தேவாரம் பாடல் பெற்ற கோவில்களில் இக்கோவிலும் உண்டு,

* சிவன் இத்திருக்கோவிலில் மேற்கு நோக்கி அருள்பாலிக்கிறார்.

* மயிலாப்பூர் என்பது திருமயிலை என்றும் கபாலீச்சரம் என்றும் வழங்கப்படுகின்றது. இந்து தொன்மவியல்படி இங்கு பார்வதி மயில் உருவத்தில் சிவனை நோக்கித் தவமிருந்ததாகவும் அதனாலேயே இத்திருக்கோவில் அமைந்துள்ளப் பகுதியும் மயிலாப்பூர் என வழங்கப்படுகிறது.

* திராவிடக் கட்டிடக்கலைப் பாணியில் கட்டப்பட்டுள்ள இக்கோவில், நாற்புறமும் மாடவீதிகளையும், திருக்குளம், அழகிய கோபுரங்கள் முதலியவற்றையும் கொண்டு விளங்குகின்றது.
முந்தைய கோவில்
First

0 Comments: