சனி, 2 ஜூலை, 2016

அருள்மிகு அக்னீஸ்வரர் திருக்கோவில்


கோவில் பெயர்   : அருள்மிகு அக்னீஸ்வரர் திருக்கோவில்

சிவனின் பெயர்   : அக்னீஸ்வரர்ர்

அம்மனின் பெயர் :  பஞ்சின் மெல்லடியம்மை, மிருதுபாத நாயகி

தல விருட்சம்     :   வில்வம் மரம்

கோவில் திறக்கும் நேரம் :   காலை 6 மணி முதல் 12 மணி வரை, 
                              மாலை  5 மணி முதல் இரவு 8 மணி வரை.

முகவரி : அருள்மிகு அக்னீஸ்வரர் திருக்கோவில், திருக்கொள்ளிக்காடு, திருவாரூர் மாவட்டம்.Ph:04369 - 237 454, +91- 4366 - 325 801

கோவில் சிறப்பு : 

* 1000-2000 வருடங்களுக்கு முன் பழமையானது.

* இது 179 வது தேவாரத்தலம் ஆகும்.

* இத்தல இறைவன் சுயம்பு லிங்கமாக அருள்பாலிக்கிறார்.

* பொதுவாக அனைத்து கோயில்களிலும் நவகிரகங்கள் ஒன்றையொன்று பார்க்காமல் அமைந்திருக்கும். ஆனால் இத்தலத்தில் "ப' வடிவில் அமைந்திருப்பது சிறப்பு. இத்தல முருகன் கையில் வில்லுடன் தனுசு சுப்பிரமணியராக அருளுகிறார். இங்குள்ள சனிபகவான் உழைப்பின் பெருமையை உணர்த்தும் வகையில் கலப்பை ஏந்திய நிலையில் அருள்பாலிக்கிறார்.

* சனி சம்பந்தப்பட்ட தோஷத்தால் பாதிக்கப்பட்டவர்கள் இங்கு வந்து அக்னீஸ்வரரை வழிபாடு செய்து, சனிபகவானை வழிபட்டால் தோஷம் விலகும் என்பது ஐதீகம்.

முந்தைய கோவில்
அடுத்த கோவில்

0 Comments: